பிளிங்கிட் ஏற்கனவே டெல்லி NCR, மும்பை, பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் போன்களை டெலிவரி செய்ய நோக்கியா, Xiaomi நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிளிங்கிட் செயலியில் ஆர்டர் செய்தால், 10 நிமிடங்களில் மின்னணு சாதனங்களை டெலிவரி செய்யும் வசதியை வழங்குகின்றனர். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப்புகள், மானிட்டர்கள், பிரிண்டர்கள் போன்ற சாதனங்களையும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்கின்றனர்.