பிக்ஸட் டெபாசிட் (FD) கணக்கைத் திறப்பதற்கு முன், வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குறுகிய கால முதலீட்டுக்கு குறைவாகவும் நீண்ட கால முதலீட்டுக்கு அதிகமாகவும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. மூன்று வருட FDக்கு வழங்கப்படும் வட்டி ஒரு வருட FD க்குக் கிடைப்பதை விட அதிகமாக இருக்கும்.
வட்டியில் கணிசமான வித்தியாசம் இருக்கும்போது, அதிக வட்டி கொடுக்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் 1 வருட நிலையான வைப்பு நிதி கணக்கில் அதிக வட்டி வழங்கும் வங்கிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
HDFC Bank
ஹெச்டிஎஃப்சி வங்கி: ஜூலை 24, 2024 முதல் நடைமுறைக்கு வந்த விகிதங்களின்படி, 1 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வழங்குகிறது.
ICICI Bank
ஐசிஐசிஐ வங்கி: இந்த தனியார் வங்கி ஒரு வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான FD கணக்கில், பொதுக் குடிமக்களுக்கு 6.7 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதமும் வட்டி விகிதம் வழங்குகிறது.
Kotak Mahindra Bank
கோடக் மஹிந்திரா வங்கி: ஓராண்டு நிலையான வைப்புத் தொகைக்கு இந்த வங்கி பொதுக் குடிமக்களுக்கு 7.1 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இது சென்ற ஜூன் 14 முதல் அமலுக்கு வந்தது.
Federal Bank
பெடரல் வங்கி: கடந்த அக்டோபர் 16 முதல் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு பொதுக் குடிமக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி விகிதம் வழங்குகிறது.
State Bank of India (SBI)
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ): இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வந்த விகிதங்களின்படி, ஓராண்டு பிக்சட் டெபாசிட் கணக்கில், பொதுக் குடிமக்களுக்கு 6.8 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
Punjab National Bank (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): ஒரு வருட FD கணக்கில் பொதுக் குடிமக்களுக்கு 6.85 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதமும் வட்டி விகிதம் வழங்குகிறது. இது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
Canara Bank
கனரா வங்கி: கனரா வங்கியும்கூட நிலையான வைப்புகளுக்கு அதே வட்டி விகிதத்தை வழங்குகிறது, அதாவது 6.85 சதவீதம் மற்றும் ஓராண்டு நிலையான வைப்புகளுக்கு 7.35 சதவீதம், இந்த விகிதங்கள் ஜூன் 11 முதல் அமலுக்கு வந்தன.
குறிப்பு: இந்தச் செய்தி தகவல் அளிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. முதலீடு தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் உரிய ஆலோசனையைப் பெறவும்.