இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!

Published : Jan 18, 2026, 06:13 PM IST

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், 'ஃபீட்டல் ஃபிளரிஷ்' என்ற பெயரில் கருவிலுள்ள குழந்தைகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், கருவிலேயே செய்யப்படும் 16 முக்கிய சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.

PREV
14
குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ்

மருத்துவக் காப்பீட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிறக்காத குழந்தைகளுக்கும் (கருவிலுள்ள குழந்தைகள்) காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (Bajaj Allianz General Insurance) அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஃபீட்டல் ஃபிளரிஷ்' (Fetal Flourish) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், வெறும் ரூ.1,025 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

24
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

• யார் விண்ணப்பிக்கலாம்?: 18 முதல் 45 வயது வரை உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் கருவிலுள்ள குழந்தைகளுக்காக இந்தத் திட்டத்தைப் பெறலாம்.

• சிறப்பு சிகிச்சைகள்: கருவிலேயே செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் (In-utero procedures) மற்றும் அதிக ஆபத்துள்ள பிரசவங்கள் (High-risk pregnancies) ஆகியவற்றிற்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

• காப்பீட்டுத் தொகை: இந்தத் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை ‘ரைடர்’ (Rider) வசதி உள்ளது. இது முதல் இரண்டு மகப்பேறு நிகழ்வுகளுக்குப் பொருந்தும்.

• காத்திருப்பு காலம்: பாலிசி தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு இந்த நன்மைகளைப் பெற முடியும்.

34
கவர் செய்யப்படும் 16 முக்கிய சிகிச்சைகள்

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும், குணப்படுத்தவும் செய்யப்படும் முக்கியமான 16 மருத்துவ முறைகள் இந்த பாலிசியின் கீழ் வருகின்றன. அவற்றில் சில:

1. அம்னியோசென்டெசிஸ் (Amniocentesis)

2. கரு திசு பயாப்ஸி (Fetal tissue biopsy)

3. FETO (பிறவி உதரவிதான குடலிறக்க சிகிச்சை)

4. கருவளைய அறுவை சிகிச்சை (Amniotic band syndrome surgery)

5. FETOSCOPIC லேசர் சிகிச்சை போன்ற நவீன மருத்துவ முறைகள்.

44
ஏன் இந்தத் திட்டம் முக்கியமானது?

இதுவரை இதுபோன்ற கருநிலை சிகிச்சைகளுக்குத் தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாததால், அதற்கான முழுச் செலவையும் குடும்பங்களே ஏற்க வேண்டிய சூழல் இருந்தது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த முயற்சி, நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த 'ஃபீட்டல் ஃபிளரிஷ்' திட்டத்தை, பஜாஜ் நிறுவனத்தின் அடிப்படைத் திட்டங்களான 'மை ஹெல்த் கேர் பிளான்' (My Health Care Plan) மற்றும் 'ஹெல்த் கார்டு' (Health Guard) ஆகியவற்றுடன் இணைத்து பெற்றுக்கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories