ஹெச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றும் பந்தன் வங்கி போன்ற முக்கிய வங்கிகள் ஏப்ரல் 1, 2026 முதல் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் பல முக்கிய வங்கிகள் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளன. குறிப்பாக, இலவச பரிவர்த்தனை வரம்பு, தினசரி பணம் எடுக்கும் வரம்பு மற்றும் கூடுதல் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படும்.
25
ATM இலவச வரம்பு குறைப்பு
இந்த மாற்றங்களை ஹெச்டிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பந்தன் வங்கி போன்ற வங்கிகள் அறிவித்துள்ளன. புதிய விதிகள் ஏடிஎம் ஆப் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
35
கூடுதல் கட்டணம் அதிகரிப்பு
ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி UPI மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதும் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனியாக கருதப்பட்ட இந்த சேவை, இப்போது சாதாரண ஏடிஎம் பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் வரிகள் வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைக்கிறது. முன்பு ரூ.1 லட்சம் வரை சில கார்டுகளில், இப்போது ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும். மேலும், பிரீமியம் கார்டுகளின் வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பல RuPay, Visa மற்றும் Mastercard கார்டுகளுக்கு பொருந்தும். மற்றொரு புறம், பந்தன் வங்கி தனது இலவச பரிவர்த்தனை வரம்பை மாற்றியுள்ளது.
55
ஏடிஎம் பரிவர்த்தனை
அதன் ஏடிஎம்-களில் மாதத்திற்கு 5 இலவச நிதி பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் மெட்ரோ நகரங்களில் 3 மற்றும் பிற பகுதிகளில் 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குப் பிறகு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23, நிதியல்லாத சேவைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்தால் ரூ.25 அபராதமும் விதிக்கப்படும். புதிய விதிகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.