Atal Pension Yojana
18 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்தால், 60 வயதுக்குப் பிறகு, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.60,000 ஓய்வூதியமாகப் பெறலாம். தினசரி செலவு ரூ.210 என்று பார்த்தால் வெறும் ரூ.7 தான் வருகிறது. நீங்களும் குறைந்த முதலீட்டில் ஓய்வூதியத் திட்டத்தைத் தேடுகிறீர்களா? அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது அமைப்புசாரா துறை ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.
Monthly Pension Scheme
இது ஓய்வுக்குப் பிறகு அவர்களின் வருமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியமாகவும், ஆண்டுக்கு ரூ.60,000-ஐயும் பெறலாம். தினசரி செலவு ரூ.210 என்று பார்த்தால் வெறும் ரூ.7 தான் வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் அமைப்பு சாரா துறையினருக்கு ஓய்வு பெற்ற பிறகு வருமான ஆதாரத்திற்கு பாதுகாப்பு அளிப்பது ஆகும்.
APY Benefits
நீங்கள் மாதத்திற்கு ரூ 1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். மேலும் உங்கள் ஓய்வூதியத்தின் அளவு நீங்கள் செய்யும் முதலீட்டைப் பொறுத்தது ஆகும். உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் மாதத்திற்கு ரூ.42 மட்டுமே செலுத்த வேண்டும். அதேபோல ரூ.5,000 மாத ஓய்வூதியத்துக்கு, 18 வயதில் மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும்.
Pension Scheme
அதாவது, ஆண்டுக்கு ரூ.60,000 ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் எவ்வளவு விரைவில் சேருகிறீர்களோ, அவ்வளவு பலன்களைப் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனா விதிகளின்படி, நீங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பணம் செலுத்த விரும்பினால், நீங்கள் ரூ. 626 செலுத்த வேண்டும், ஆறு மாதங்களில் பணம் செலுத்தினால், நீங்கள் ரூ.1,239 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
Retirement Planning
அதாவது உங்கள் முதலீடு பாதுகாப்பானது மற்றும் நீங்கள் தொடர்ந்து ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். 2015-16ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன்மூலம் அமைப்பு சாராத் துறையைச் சேர்ந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு வருமான ஆதாரம் குறித்த கவலையிலிருந்து விடுபடலாம். குறைந்த முதலீட்டில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோருக்கும், தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவோருக்கும் இந்தத் திட்டம் ஒரு நல்ல வழி ஆகும்.
கடன் வாங்கும் விதிகளை அதிரடியாக மாற்றிய ரிசர்வ் வங்கி.. என்ன தெரியுமா?