Old Notes Sale : பீரோ, பர்ஸ்ல பழைய 50, 100 ரூபாய் நோட்டு எப்போவாச்சும் கிடைச்சிருக்கா? அதை செலவு பண்றதுக்கு முன்னாடி ஒருமுறை நல்லா பாருங்க. சில தனித்துவமான டிசைன், ஸ்பெஷல் சீரியல் நம்பர் இருக்கிற நோட்டுகளுக்கு பெரிய மதிப்பு இருக்கு.
உங்க பீரோவிலோ, பர்ஸிலோ பழைய 50 அல்லது 100 ரூபாய் நோட்டு கிடைத்தால், அதை உடனே செலவு செய்ய வேண்டாம். தனித்துவமான டிசைன், ஸ்பெஷல் சீரியல் நம்பர் அல்லது ஏதாவது விசித்திரமான அம்சம் இருந்தால், அந்த நோட்டுகளுக்கு அதன் முகமதிப்பை விட பல மடங்கு அதிக விலை கிடைக்கலாம்.
பழைய நோட்டுகளை சேகரிப்பவர்கள், அசாதாரணமான அம்சங்கள் உள்ள நோட்டுகளைத் தேடுகிறார்கள். உதாரணமாக, அரிதான அச்சிட்ட ஆண்டு, ஸ்பெஷல் சீரியல் நம்பர் அமைப்பு, தனித்துவமான சின்னங்கள் அல்லது 'limited edition' நோட்டுகள் போன்றவை. இந்த அம்சங்கள் தான் ஒரு நோட்டின் மதிப்பை பல மடங்கு உயர்த்துகின்றன.
ஸ்பெஷல் சீரியல் நம்பர்கள்தான் இந்த நோட்டுகளுக்கான தேவையை அதிகரிக்க முக்கிய காரணம். குறிப்பாக '786' போன்ற எண்கள் மிகவும் மதிக்கப்படுகின்றன. இந்த எண்கள் நோட்டின் முகமதிப்பை விட பல மடங்கு விலையை உயர்த்தும். 5, 10, 20, 100 ரூபாய் நோட்டுகளின் கடைசி மூன்று இலக்கங்களை சேகரிப்பாளர்கள் கவனிப்பார்கள். 786 போன்ற எண்கள் இருந்தால், அந்த நோட்டுக்கு மவுசு அதிகம்.
புதிய சீரிஸ் நோட்டுகள் வந்ததால், பழைய டிசைன் 50 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து, அதன் தேவை அதிகரித்துள்ளது. அரிய சீரியல் நம்பர் உள்ள புத்தம் புதிய (uncirculated) பழைய 50 ரூபாய் நோட்டுகள் சில ஆயிரம் முதல் பல லட்சம், சில சமயம் கோடி ரூபாய் வரை கூட விற்கப்படலாம். கிழிந்த, கறை படிந்த, அல்லது அதிகம் மடிந்த நோட்டுகளை வாங்குபவர்கள் தவிர்த்துவிடுவார்கள். நோட்டு எவ்வளவு அரிதானதோ, அவ்வளவு அதிக விலை கொடுக்க வாங்குபவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு பழைய நோட்டின் மதிப்பு பல விஷயங்களைப் பொறுத்தது. நோட்டின் கண்டிஷன், அது எவ்வளவு அரிதானது, சேகரிப்பாளர்களிடம் உள்ள தேவை, மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவை முக்கியம். சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட நோட்டை விட, நல்ல நிலையில் இருக்கும் ஸ்பெஷல் நோட்டுக்கு மதிப்பு அதிகம்.
ஆனால், உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பழைய 50, 100 ரூபாய் நோட்டும் உங்களை ஒரே இரவில் லட்சாதிபதியாக்கிவிடும் என்று நினைக்க வேண்டாம். ஒரே நோட்டில் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது போன்ற செய்திகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை. உங்களிடம் பழைய நோட்டு இருந்தால், அதை பத்திரமாக வைத்து, விற்கும் முன் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். அரிய நாணயங்கள் அல்லது நோட்டுகளை சேகரிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு. சில ஸ்பெஷல் நோட்டுகளுக்கு அதன் முகமதிப்பை விட அதிக மதிப்பு நிச்சயம் உண்டு.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.