Bank Holidays List: அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் வங்கிகள் இயங்காது. இது தொடர்பான முழு பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.
புதிய நிதியாண்டான ஏப்ரல் மாதம் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில் பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறைகள் காரணமாக பல நாட்கள் வங்கிகள் இயங்காது. உங்களுக்கு வங்கியில் முக்கிய வேலைகள் இருந்தால், வீட்டை விட்டு கிளம்பும் முன் இந்த வங்கி விடுமுறை பட்டியலை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் அலைச்சலைத் தவிர்க்க உதவும்.
24
வங்கி விடுமுறை லிஸ்ட்
ஏப்ரல் மாதம் விடுமுறையுடன் தொடங்குகிறது. மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் இந்த நாட்களில் மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 1 (புதன்): வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிப்பு (புதிய நிதியாண்டு தொடக்கம்). ஏப்ரல் 2 (வியாழன்): Maundy Thursday (முக்கியமாக கேரளா மற்றும் தென்னிந்தியாவில் விடுமுறை). ஏப்ரல் 3 (வெள்ளி): புனித வெள்ளி (Good Friday) (நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை). ஏப்ரல் 5 (ஞாயிறு): வார விடுமுறை. ஏப்ரல் 11 (சனி): மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை. ஏப்ரல் 12 (ஞாயிறு): வார விடுமுறை. ஏப்ரல் 14 (செவ்வாய்): டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, பைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு (நாடு முழுவதும் விடுமுறை).
34
என்னென்ன நாட்கள் விடுமுறை?
ஏப்ரல் 15 (புதன்): இமாச்சல் தினம் மற்றும் பெங்காலி புத்தாண்டு (குறிப்பிட்ட மாநிலங்களில் விடுமுறை). ஏப்ரல் 19 (ஞாயிறு): வார விடுமுறை. ஏப்ரல் 20 (திங்கள்): அட்சய திருதியை மற்றும் பசவ ஜெயந்தி (பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை). ஏப்ரல் 25 (சனி): மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. ஏப்ரல் 26 (ஞாயிறு): வார விடுமுறை. ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளி விடுமுறை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) வங்கிகள் இயங்காது. அதனால், உங்கள் வங்கி வேலைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது.
வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்காக இந்த டிஜிட்டல் சேவைகள் 24x7 இயங்கும். நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங்: ஆன்லைனில் பணம் அனுப்ப எந்த தடையும் இருக்காது. பணம் எடுக்க ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும். கூகுள் பே, போன் பே அல்லது மற்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் தடையின்றி தொடரும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.