தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ..720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனையானது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,690க்கு விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 06) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5.650ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,141ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,128ஆக விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ரூ.80.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.