Amazon Now: பாதி விலைக்கு மளிகை சாமான்கள்! அசத்தும் அமேசான்! வாடிக்கையாளர்கள் ஹேப்பி! முழு விவரம்!

Published : May 16, 2026, 01:12 PM IST

Amazon Now: அமேசான் நிறுவனம் ரூ.200-க்கு மளிகை பொருட்கள் வாங்கினால் ரூ.100 கேஷ்பேக் கொடுக்கிறது. இந்த சலுகையின் முழு விவரம் குறித்தும் டெலிவரி குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
மளிகை பொருட்கள் விற்பனையில் அமேசான் ஆதிக்கம்

இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதேபோல் இந்தியாவின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விரைவு விநியோக (Quick Commerce) சந்தையில், Blinkit, Zepto மற்றும் Swiggy Instamart போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இதனால் அமேசான் நிறுவனமும் Amazon Now (அமேசான் பிரெஷ் சேவையின் கீழ் உள்ள விரைவு விநியோகப் பிரிவு) சேவை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியது.

24
ரூ.200 பொருள் வாங்கினால் ரூ.100 கேஷ்பேக்

இந்த நிலையில், பிளின்கிட் மற்றும் ஜெப்டோ ஆகிய நிறுவனங்களை தூக்கி சாப்பிடும் வகையில் 200 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்குபவர்களுக்கு 50% கேஷ்பேக் சலுகையை அறிவித்து அமேசான் அதிரடி காட்டியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் 'Amazon Now ' தளம் மூலமாக குறைந்தபட்சம் ரூ.200-க்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, அவர்களுக்கு 50% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கணக்குப்படி பார்த்தால் நீங்கள் 200 ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்யும்போது 100 ரூபாய் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்.

50% கேஷ்பேக்

ரூ.200 முதல் ரூ.1,400 வரையிலான ஆர்டர்களுக்கு இந்த ரூ.100 கேஷ்பேக் நிலையாக இருக்கும். ஒருவேளை ஆர்டர் மதிப்பு ரூ.1,400-ஐத் தாண்டும் போது இந்த கேஷ்பேக் தொகை ரூ.200 ஆக உயரும். இந்த கேஷ்பேக் தொகை பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் 'அமேசான் பே' கணக்கில் பாயிண்டுகளாக உடனடியாக வரவு வைக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் மளிகை பொருட்களை அமேசான் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்து அசத்தி வருகிறது.

34
பிளின்கிட் நிறுவனத்துக்கு பின்னடைவு

பிளின்கிட் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 2,200 சிறிய குடோன்களை (Dark Stores) கொண்டுள்ள நிலையில், அமேசான் தற்போது 750 முதல் 800 டார்க் ஸ்டோர்களுடன் தனது சேவையை மெட்ரோ நகரங்களில் தீவிரப்படுத்தியுள்ளதால் 'பிளின்கிட்' போன்ற நிறுவனங்களுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. சமீபத்திய காலாண்டில் அமேசான் நிறுவனம் உலகளவில் ரூ.2,91,000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. நிதி இருப்பு அதிகம் உள்ளதால் இந்த அதிரடி கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தி போட்டி நிறுவனங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை தன்பக்கம் அமேசான் இழுத்து வருகிறது.

44
குறைந்தபட்ச ஆர்டர் மற்றும் டெலிவரி கட்டணம்

அமேசான் நவ் (Amazon Now) தளத்தில் இந்த ரூ. 100 கேஷ்பேக் சலுகையைப் பெறுவதற்கு ரூ. 200-க்கு ஆர்டர் செய்தால் போதுமானது என்றாலும், ரூ. 249-க்கு கீழ் செய்யப்படும் ஆர்டர்களுக்கு அமேசான் நிறுவனம் சிறிய தொகையை டெலிவரி கட்டணமாக (Delivery Fee) வசூலிக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் முழுப் பலனையும் பெற ரூ. 250 அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்வது கூடுதல் லாபகரமாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories