நடுத்தர மக்களும் இனி பிளைட்டில் போகலாம்; ரூ.1,500க்குள் விமான கட்டணம்; இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

Published : Jan 12, 2025, 11:46 AM IST

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான பயண சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

PREV
14
நடுத்தர மக்களும் இனி பிளைட்டில் போகலாம்; ரூ.1,500க்குள் விமான கட்டணம்; இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!
Air India Express

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பொங்கல் பண்டிகை காலம் என்பதாலும் இந்தியா விமான நிறுவனங்கள் போட்டி போட்டி கட்டண சலுகையை அறிவித்து வருகின்றன. பண்டிகையையொட்டி இன்டிகோ விமான நிறுவனம் விமான கட்டணங்களை பெருமளவு குறைத்தது. இன்டிகோவை தொடர்ந்து இப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது.

24
Flight Ticket Discount

ரூ.1,500க்குள் விமான கட்டணம் 

அதாவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 'ஃபிளாஷ் சேல்' என்ற சிறப்பு டிக்கெட் விற்பனையை கொண்டு வந்துள்ளது. இந்த விற்பனையின்கீழ் விமான டிக்கெட் கட்டணம் ரூ.1,498ல் தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 13ம் தேதி வரை இருக்கும். அதன்பிறகும் இந்த சலுகை நீட்டிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'ஃபிளாஷ் சேல்' சிறப்பு சலுகையில் உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

CIBIL ஸ்கோர் என்றால் என்ன? அதுதான் கடன் தகுதியைத் தீர்மானிக்குமா?

34
Air India Express Special Sales

உள்நாட்டு விமானங்கள் 

இந்த சலுகையில் ஜனவரி 24 முதல் செப்டம்பர் 30 வரையிலான தேதிகளுக்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்தச் சலுகையின் கீழ் நீங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி அல்லது பிற முன்பதிவு தளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இது மட்டுமின்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் முலம் 'எக்ஸ்பிரஸ் லைட்' என்ற சலுகை மூலம் கூடுதல் கட்டண குறைப்பும் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எந்த வசதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. ஒட்டுமொத்தமாக, நீங்கள் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வாங்கலாம் மற்றும் சில கூடுதல் நன்மைகளையும் பெறலாம். 

44
Flight Tickets

லாயல்டி உறுப்பினர்களுக்கு கூடுதல் தள்ளுபடி 

இந்த சலுகையின் கீழ், நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய லக்கேஜ்களை 3 கிலோ அதிகரிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் லாயல்டி உறுப்பினர்களாகும் நபர்களுக்கு கட்டணத்தில் கூடுதலாக 25% தள்ளுபடி கிடைக்கும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்களுக்கு சூடான உணவுகள், ஜன்னல் இருக்கைகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

QR ஸ்டிக்கர்களை மாற்றும் வினோத கும்பல்.. கடைகளில் கியூஆரை வைத்து நடக்கும் புது மோசடி.!

click me!

Recommended Stories