Black Day for Gold
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் சுங்க வரியை குறைப்பதாக அறிவித்த பிறகு, தங்கத்தின் விலை 5% சரிந்ததால், அதன் விலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த திடீர் வீழ்ச்சியானது, ஒரே நாளில் 10.7 லட்சம் கோடி ரூபாய் அதன் மொத்த மதிப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Gold Prices Fall
பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்த நடவடிக்கை இதுவரை பதிவு செய்யப்பட்ட ஆறாவது பெரிய செல்வ பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், தங்கம் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதால், பங்குகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சியால் ஏற்பட்ட சேதத்தை விட, செல்வ அழிவு ஆனது மிக அதிகமான குடும்பங்களை பாதித்திருக்கும்.
Gold Price
உலகளவில் மிகப்பெரிய தங்க உரிமையாளர்களில் ஒன்றாக அறியப்படும் இந்திய குடும்பங்களை தங்கத்தின் விலை வீழ்ச்சி கணிசமாக பாதிக்கிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை சந்தித்தது. கிட்டத்தட்ட 14.7 சதவீதம் உயர்ந்து சென்செக்ஸை விஞ்சியது. இது அதே நேரத்தில் 11 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
Union Budget 2024
ஆனால் ஜூலையில், MCX தங்கம் சுமார் 5.2 சதவீதம் குறைந்தது. பட்ஜெட்டின் போது, நிதி அமைச்சர் தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகவும், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைப்பதாக அறிவித்தார்.
Nirmala Sitharaman
இந்த புதிய அறிவிப்பு ஆனது தங்கத்தின் மீதான ஒட்டு மொத்த வரிச் சுமையைக் குறைப்பதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மதிப்பிடப்பட்ட 18.5 சதவீதத்திலிருந்து (ஜிஎஸ்டி உட்பட) வெறும் 9 சதவீதமாக கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்படும். இதற்கிடையில், தங்கத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையால் தங்க வியாபாரிகள் அதிருப்தி அடைந்து, தங்களிடம் உள்ள பொருட்களை விற்று, லாபத்தை பதிவு செய்யத் தொடங்கினர்.