ஆதார் அப்டேட் செய்ய கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்? முழு விவரம்

Published : Sep 10, 2025, 11:33 AM IST

ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற, அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று, படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் மாற்றம் செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

PREV
15
ஆதார் கட்டணம்

இந்தியர்களின் முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் ஆதார் கார்டு (UIDAI வழங்குவது) வங்கி, அரசு திட்டங்கள், பயணம், டிஜிட்டல் சரிபார்ப்பு என பல இடங்களில் அவசியமாகிறது. அதனால், குறிப்பாக பிறந்த தேதி (DOB) உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருப்பது மிக முக்கியம். தற்போது, ​​UIDAI பிறந்த தேதியை திருத்தும் செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ள நிலையில், அதை ஆன்லைனில் செய்ய முடியாது. நேரடியாக சென்டரில்தான் செய்ய வேண்டும்.

25
ஆதார் கார்டு

பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றால், அருகிலுள்ள ஆதார் எண்ரோல்மெண்ட்/அப்டேட் சென்டர் செல்ல வேண்டும். அங்கு கிடைக்கும் ஆதார் அப்டேட்/கரெக்ஷன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், அரசு வழங்கும் அடையாள அட்டை போன்ற DOB நிரூபண ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். அடுத்து, உங்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடக்கும். பின்னர், 14 இலக்க URN (புதுப்பிப்பு கோரிக்கை எண்) ரசீது வழங்கப்படும்.

35
ஆதார் கட்டண விவரங்கள்

இதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்யலாம். ஒரு அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். முன்பெல்லாம் UIDAI ஆன்லைனில் DOB, பெயர் போன்ற விவரங்களைத் திருத்த அனுமதித்தது. ஆனால் இப்போது, ​​முகவரி மாற்றம் மட்டும் ஆன்லைனில் (MyAadhaar portal) செய்ய முடியும். பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை கண்டிப்பாக சென்டரில் மட்டுமே திருத்த முடியும்.

45
ஆதார் ஆவணங்கள் பட்டியல்

பிறந்த தேதி திருத்தத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் பின்வருமாறு, அரசு வழங்கிய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மத்திய/மாநில அரசு அல்லது பப்ளிக் செக்டார் வழங்கும் அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/போர்டு வழங்கும் மதிப்பெண் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை (ஓய்வூதியம் செலுத்தும் ஆணை) போன்றவை ஆகும்.

55
ஆதார் கார்டு அப்டேட்

முக்கியமாக, UIDAI விதிகளின்படி DOB ஒரே முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். மீண்டும் மாற்ற வேண்டும் என்றால், UIDAI ரீஜினல் ஆபீஸ் மூலம் exception-management process வழியாக மட்டுமே செய்ய வேண்டும். அதற்காக, சரியான காரணம் மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணமில்லாமல் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது.

Read more Photos on
click me!

Recommended Stories