என்ன தான் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றாலும் பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் துளியும் குறைந்ததாக தெரியவில்லை. விலை ஏற ஏற தங்கத்தின் மீதான மதிப்பும், அதன் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உதாரணமாக ஒரு இந்தியாவில் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால் விழாவிற்கு வரும் அனைவரும் முதலில் கேட்கும் கேள்வி, பெண்ணுக்கு எவ்வளவு சவரன் நகை போட்டார்கள் என்ற கேள்வி தான்.
அந்த அளவிற்கு தங்கத்தின் மீதான பார்வை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. தற்போதைய சூழலில் தங்கம் கட்டமைக்கப்பட்ட ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறி உள்ளது. அதனால் அதனை வாங்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.40 உயர்ந்துள்ளது. அதபடி சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. புதிய விலைப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பண்டிகை தினம் வருவதால் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.