8th Pay Commission: அடிப்படைச் சம்பளம் ரூ.72,000 ஆக உயருமா? 4.0 'பிட்மென்ட் ஃபாக்டர்' விளக்கம்.!

Published : Sep 21, 2026, 11:05 AM ISTUpdated : Sep 21, 2026, 11:09 AM IST

8-வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் ₹72,000 ஆக உயருமா? 4.0 பிட்மென்ட் ஃபாக்டர் கணக்கீடு, புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்த முழு விவரங்கள் இதோ!

PREV
18
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி.!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக விளங்குவது 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகளும் அவர்களுடைய கோரிக்கைகளும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய அமைப்புகளிடம் இந்த ஆணையம் பல்வறு இடங்களில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதும், ஓய்வூதிய முறையை மறுசீரமைப்பதுமே இந்த விவாதங்களின் முக்கிய நோக்கமாகும்.

28
ஊதியக் குழுவின் பின்னணி மற்றும் காலக்கெடு

இது தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்கவும் விசாரணை நடத்தவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.ஐ.எம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் பணியாற்றுகின்றனர். 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்திற்கு மொத்தம் 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆணையம் தனது முழுமையான பரிந்துரை அறிக்கையை 2027-ஆம் ஆண்டின் மத்தியில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிக்கலாமே - LPG Gas e-KYC: கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாதா? ஆதார் e-KYC குறித்து அரசு புதிய விளக்கம்.. முழு விவரம்!

38
பிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) என்றால் என்ன?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மாற்றத்தில் 'பிட்மென்ட் ஃபாக்டர்' என்பது மிகவும் முக்கியமான ஒரு பெருக்கல் காரணியாகும் (Multiplier). 7-வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்கள் பெற்று வரும் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை (Basic Pay), புதிய ஊதியக் குழுவின் கீழ் எவ்வாறு மறுசீரமைப்பது என்பதை இந்த பிட்மென்ட் ஃபாக்டரே தீர்மானிக்கிறது.

முந்தைய ஊதியக் குழுக்களின் வரலாற்றைப் பார்த்தால், 6-வது ஊதியக் குழுவில் 1.86 என்ற பிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 7-வது ஊதியக் குழுவில் இந்த காரணி 2.57 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, 8-வது ஊதியக் குழுவில் 3.83 முதல் 4.0 வரையிலான பிட்மென்ட் ஃபாக்டரை நிர்ணயிக்க வேண்டும் என்று பல்வேறு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையும் படிக்கலாமே - 8th Pay Commission Big Update: நர்ஸ்களுக்கு லெவல் 10 சம்பள உயர்வு? 8-வது ஊதியக் குழுவின் அதிரடி திருப்பம்!

48
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளும் ஆய்க்ராய்டு ஃபார்முலாவும்

ஊழியர் அமைப்புகளில், பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்கம் (BPMS) 4.0 பெருக்கல் காரணியை வழங்க வேண்டும் என்றும், அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFPA) 3.83 பெருக்கல் காரணியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

மேலும், சில ஊழியர் அமைப்புகள் 'ஆய்க்ராய்டு ஃபார்முலா' (Aykroyd Formula) முறையைக் கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றன. இந்த ஃபார்முலா என்பது நாட்டின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் ஊட்டச்சத்துத் தேவைகள், உடைகள் மற்றும் வீட்டு வாடகை போன்ற அத்தியாவசிய செலவினங்களைக் கணக்கிட்டுச் சம்பளத்தை நிர்ணயிக்கும் ஒரு அறிவியல் ரீதியான அணுகுமுறையாகும். இதையும் படிக்கலாமே - UPI மூலம் பணம் அனுப்பும்போது இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க! மோசடியில் சிக்காமல் இருக்க 9 முக்கிய பாதுகாப்பு விதிகள்!

58
அடிப்படைச் சம்பள உயர்வு கணக்கீடு: ₹18,000 முதல் ₹72,000 வரை

அடிப்படைச் சம்பள உயர்வு கணக்கீட்டின்படி, தற்போது 7-வது ஊதியக் குழுவின் கீழ் ஆரம்ப நிலை (Level 1) ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ₹18,000 ஆக உள்ளது. மத்திய அரசு 4.0 பிட்மென்ட் ஃபாக்டருக்கு ஒப்புதல் அளித்தால், இந்த அடிப்படைச் சம்பளம் நேரடியாக நான்கு மடங்கு உயர்ந்து ₹72,000 ஆக மாறும். ஒருவேளை 3.83 காரணி ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது ₹68,940 ஆக உயரும். இதேபோல் Level 5 (இடைநிலை ஊழியர்கள்) தற்போதைய அடிப்படைச் சம்பளம் ₹29,200 ஆக இருப்பது 3.83 பிட்மென்ட் ஃபாக்டரில் ₹1,11,836 ஆகவும், 4.0 பிட்மென்ட் ஃபாக்டரில் ₹1,16,800 ஆகவும் உயரும். இதையும் படிக்கலாமே - D-Mart : இங்கே குறைவான விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்! என்னென்ன தெரியுமா?

68
ஓய்வூதியதாரர்களுக்கான சாதகமான தாக்கம்

இந்த பிட்மென்ட் ஃபாக்டர் உயர்வு என்பது பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் பயனளிக்கும். தற்போது 7-வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியமாக (Basic Pension) ₹9,000 பெறப்பட்டு வருகிறது.

புதிய 8-வது ஊதியக் குழுவின் கீழ் 3.83 பிட்மென்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹34,470 ஆக உயரும். அதே நேரத்தில், 4.0 பெருக்கல் காரணி பயன்படுத்தப்பட்டால் ஓய்வூதியத் தொகை ₹36,000 ஆக அதிகரிக்கும். இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் நிதிப் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும்.

78
அகவிலைப்படி (DA/DR) மற்றும் பிற படிகளின் மறுசீரமைப்பு

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance - DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR ஆகியவை பூஜ்ஜியமாக (0%) மாற்றப்படும்.

அதன் பின்னர், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தின் மீது வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி (TA) மற்றும் புதிய அகவிலைப்படி ஆகியவை சேர்க்கப்பட்டு ஊழியர்களுக்கு மொத்த மாதாந்திரச் சம்பளம் (Gross Salary) கணக்கிடப்படும்.

8-வது ஊதியக் குழுவின் இறுதிப் பரிந்துரைகள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நிதிநிலை மிகப்பெரிய அளவில் உயரும் என்பது உறுதி.

88
அரசு ஊழியர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும்

8-வது ஊதியக் குழுவின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள 4.0 பிட்மென்ட் ஃபாக்டர் உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் நிதிச் சுமைகளைக் குறைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அடிப்படைச் சம்பளமும் ஓய்வூதியமும் உயர்த்தப்படும் போது, அது ஊழியர்களின் வாங்கும் திறனை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும். 2027-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை இறுதிப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, இந்த ஊதிய மாற்றம் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய ஆதரவாக அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories