8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கியுள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஃபிட்மென்ட் பேக்டர் 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்களிடையே தற்போது அதிகமாக பேசப்படும் தலைப்பு 8வது ஊதியக் குழு என்று அடித்துக் கூறலாம். இந்த குழுவின் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஊழியர்களிடம் “எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்?” என்ற கேள்வி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஃபிட்மென்ட் பேக்டர் என்றால் அதுவே மிகப்பெரிய கவலை. சில ஆய்வுகள் படி, இந்த அளவு 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம். அப்படியானால் தற்போது உள்ள குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000, புதிய அளவில் ரூ.32,940 முதல் ரூ.44,280 வரை உயர வாய்ப்பு உள்ளது.
25
ஃபிட்மென்ட் பேக்டர் என்றால் என்ன?
எளிதாக சொன்னால், பழைய அடிப்படை ஊதியம்-ஐ புதிய Basic pay ஆக மாற்ற பயன்படுத்தப்படும் Multiplication value தான் ஃபிட்மென்ட் பேக்டர். 7வது சம்பள கமிஷன்-ல் இது 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, ஒருவர் முன்பு பெற்ற அடிப்படை சம்பளம் 2.57 = புதிய அடிப்படை சம்பளம். இப்போது 8வது சம்பள கமிஷன்-ல் இது எவ்வளவு இருக்கும் என்பதே ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்பு.
35
எந்த அடிப்படையில் ஃபிட்மென்ட் பேக்டர் நிர்ணயிக்கப்படுகிறது?
இதை நிர்ணயிப்பதில் பணவீக்கம், வாழ்வாதாரச் செலவு, குடும்ப அடிப்படை தேவைகள் போன்ற பல காரணங்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் Dr. Wallace R. Ackroyd Formula ஆனது, உணவு, உடை, வீடு, பயணம் என மனிதனின் அடிப்படை செலவுகளை கணக்கிட்டு Fitment Fix செய்ய உதவுகிறது.
Ambit Capital ஆராய்ச்சி படி, ஃபிட்மென்ட் பேக்டர் 1.83–2.46 ஆக இருந்தால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் கீழ்க்கண்டவாறு அதிகரிக்கும்:
1.83 பேக்டர்: ரூ.32,940
2.46 பேக்டர்: ரூ.44,280
இதனால் சம்பள உயர்வு 14% முதல் 54% வரை இருக்கலாம். ஆனால் 54% உயர்வு அரசு மீது பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்துவதால் அது சாத்தியமில்லை என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
55
எப்போது இந்த உயர்வு கிடைக்கும்?
நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த சம்பளக் குழு, அடுத்த 18 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அதை அமைச்சரவையில் (Cabinet) அங்கீகரித்த பிறகு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றத்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வுபெற்றவர்களும் பயனடைவார்கள்.