8th Pay Commission
மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைக்காமல், ஊதியக் குழு முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Eighth Pay Commission
மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஜனவரி 2016 முதல் அமல்படுத்தியது. 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவிற்கு முன், 4வது, 5வது மற்றும் 6வது ஊதியக் குழுக்கள் தலா 10 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டிருந்தன. இதனால்தான் 8வது ஊதியக் குழுவை அமைக்கக் கோரி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
8th Pay Commission formation
எப்படி இருந்தாலும், ஊதியக் குழுவின் காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில், இப்போது மத்திய அரசு ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக புதிய அணுகுமுறையை ஆராய்கிறது என்ற செய்தி அரசு ஊழியர்களிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
Central government employees
"முன்பு போல் புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேறு வழியை அரசாங்கம் யோசித்து வருகிறது" என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்புகளில் இதுபற்றிப் பேசப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
National Council Joint Consultative Machinery (NC JCM)
8வது ஊதியக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசின் நிலைப்பாட்டை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்திடம் இல்லை என்றும், எனவே 7வது ஊதியக் குழுவின் காலக்கெடு குறித்த கேள்வி எழவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
NC JCM on CPC recommendations
அடுத்த ஊதியக் குழுவை அமைக்கும் திட்டத்தை அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், புத்தாண்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
NC JCM letter
NC JCM 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்துகிறது
8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை என்று நிதி அமைச்சகம் கடந்த மாதம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, NC JCM மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதி, “உடனடியாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியது.
Pay Commission system
டிசம்பர் 3 தேதியிட்ட கடிதத்தில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது என்றும், அடுத்த ஊதியம் மற்றும் ஓய்வூதியத் திருத்தம் ஜனவரி 1, 2026 முதல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.