8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எப்போது, எவ்வளவு உயரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர் அமைப்புகள் முன்வைத்துள்ள ஒரு முக்கிய கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.
8வது ஊதியக் குழுவிடம் மத்திய அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தற்போது 18,000 ரூபாயாக உள்ள அடிப்படை சம்பளத்தை (Basic Pay) 69,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கேட்கின்றன. அத்துடன் 3.83 ஃபிட்மென்ட் ஃபேக்டரை (Fitment Factor) அமல்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இந்த தொகையோ அல்லது ஃபிட்மென்ட் ஃபேக்டரோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை; இது வெறும் கோரிக்கை மட்டுமே.
26
7வது ஊதியக் குழு
7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய். இதை 69,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதே 8வது ஊதியக் குழுவிடம் வைக்கப்பட்டுள்ள முக்கிய டிமாண்ட். அதாவது, அடிப்படை சம்பளத்தை சுமார் 51,000 ரூபாய் வரை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே புதிய சம்பள விகிதம் அதிகாரப்பூர்வமாக முடிவாகும்.
36
ஃபிட்மென்ட் ஃபேக்டர்
சம்பள உயர்வை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 8வது ஊதியக் குழுவில் 3.83 ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயிக்க வேண்டும் என ஊழியர்கள் கேட்கின்றனர். உதாரணமாக, தற்போதைய 18,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை 3.83 ஆல் பெருக்கினால் 68,940 ரூபாய் வரும். இதை தோராயமாக 69,000 ரூபாயாக கணக்கிட்டே இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். இதற்கு முன் 7வது ஊதியக் குழுவில் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு மட்டுமின்றி, அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் போது குடும்ப உறுப்பினர்களை கணக்கிடும் முறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF) சார்பாக, ஐந்து நபர்கள் கொண்ட குடும்ப அடிப்படையிலான கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
56
குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்
ஊழியர்கள், அவர்களின் கணவன்/மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி, அவர்களை நம்பியுள்ள வயதான பெற்றோர்களையும் குடும்பக் கணக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல ஊழியர்கள் தங்கள் பெற்றோரை கவனித்து வருவதால், அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் போது இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
66
அரசு ஊழியர் சம்பளம்
8வது ஊதியக் குழுவின் அடுத்த கட்ட நேரடி ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் 2026 அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் மும்பையில் கூட்டம் நடைபெறும். சம்பளம், பென்ஷன் மற்றும் சலுகைகள் தொடர்பான தங்களது பரிந்துரைகளை சமர்ப்பிக்க கமிஷனுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.