8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்

Published : Oct 30, 2026, 11:23 AM IST

8-வது மத்திய ஊதியக் குழு குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) தொடர்பாக ஊழியர் சங்கங்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளன.

PREV
16
புதிய கோரிக்கை குவயுது
8-வது மத்திய ஊதியக் குழு தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) திருத்தம் தொடர்பாக பல அமைப்புகள் புதிய கோரிக்கைகளை அரசிடம் கொடுத்துள்ளன.
26
மாற்றங்களைக் கோரி ஊதியக் குழுவிடம் கோரிக்கை மனு
பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் (BPS) மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் போஸ்டல் ஆர்கனைசேஷன்ஸ் (FNPO) போன்ற முக்கிய அமைப்புகள் அகவிலைப்படி முறையில் மாற்றங்களைக் கோரி ஊதியக் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன.
36
3 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி
தற்போது ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி 1, ஜூலை 1) DA மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் விலைவாசி உயர்வை உடனடியாக எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியை மாற்ற வேண்டும் என்று பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் வலியுறுத்தியுள்ளது.
46
DR-ஐ அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்க வலியுறுத்தல்
அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டும்போது அதை அடிப்படைச் சம்பளத்துடன் (Basic Pay) இணைக்க வேண்டும் என்று FNPO கோரியுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் இதேபோல் DR-ஐ அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
56
வருமான வரி விலக்கு?
அகவிலைப்படி என்பது கூடுதல் வருமானம் அல்ல, விலைவாசியை சமாளிக்கத் தரும் தொகை என்பதால் அதற்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று FNPO கோரியுள்ளது. HRA மற்றும் போக்குவரத்து படிகளுக்கும் வரி விலக்கு கேட்கப்பட்டுள்ளது.
66
அரசிடம் இறுதியறிக்கை
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8-வது மத்திய ஊதியக் குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டதில் இருந்து 18 மாதங்களுக்குள், அதாவது மே 2027-க்குள் அரசிடம் இறுதியறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories