இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்! சம்பளம் மற்றும் EMI பேமெண்ட்களை பாதிக்கும்!

First Published | Aug 1, 2023, 4:00 PM IST

ஆகஸ்ட் மாதம் வங்கி விதிகளில் பல மாற்றங்களைக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சிலருக்கு வங்கிக் கணக்கு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் மாதம் வங்கி விதிகளில் பல மாற்றங்களைக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் அன்றாட செயல்பாட்டை பாதிக்கக்கூடும். EMI செலுத்துபவர்கள் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் பயனடைவார்கள். ATM கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு இந்த மாற்றங்கள் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

NACH

நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம், ஈவுத்தொகை மற்றும் வட்டி போன்றவற்றை மாற்ற வங்கிகளால் பயன்படுத்தப்படும் மொத்த கட்டண முறை ஆகும். மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, தண்ணீர் போன்றவற்றுக்கான பில்களை செலுத்தவும், கடன் தவணை செலுத்தவும், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யவும், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தவும் பயன்படுகிறது. இது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆல் உருவாக்கப்பட்டது. வங்கி வேலை நாட்களில் மட்டுமே கிடைத்து வந்த இந்த சேவை ஆகஸ்ட் 1 முதல் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.

Tap to resize

பரிமாற்ற கட்டணம் உயர்வு

இதுபற்றி ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்தது. ஏடிஎம் இயந்திரங்களில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான கட்டணம் கூடுகிறது. இந்தக் கட்டணதை ரூ.15ல் இருந்து ரூ.17 ஆக உயர்த்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்படும். ஏடிஎம்கள் அமைப்பதற்கான செலவு அதிகரித்து வருகிறது. இதனால், வங்கிகளுக்கு ஏடிஎம் பராமரிப்புக்கு ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் திருத்தம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB) கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டு வாசலில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி தற்போது இந்த சேவைகளுக்கு எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை, ஆனால் ஆகஸ்ட் 1 முதல், இதுபோன்ற ஒவ்வொரு கோரிக்கைக்கும் ரூ.20 (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) வசூலிக்கத் தொடங்கும். இருப்பினும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் வரம்பு இருக்காது.

ஐசிஐசிஐ வங்கி கட்டணம்

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ தனது உள்நாட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பணப் பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் காசோலை புத்தகக் கட்டணங்கள் மீதான வரம்புகளை திருத்தியமைக்கப் போவதாகக் கூறியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் இணையதளத்தின்படி, ஆகஸ்ட் 1 முதல் வாடிக்கையாளர்கள் நான்கு இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மதிப்பாய்வு செய்யும் முறை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வணி பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளன. வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Latest Videos

click me!