தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் சலுகை பேருதவியாக இருக்கும். 3000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறுவோர் 200 முறை டோல் கட்டணம் இன்றி பயணிக்கலாம்
தனியார் வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறைக்கான அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்த நிலையில், இது தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பேருதவியாக இருக்கும். வரும் ஆகஸ்ட் 15 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25
அப்பாடா! ரூ.120 இருந்து ரூ.15 ஆக குறைந்த கட்டணம்
3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் 120 ரூபாய் டோல் கட்டணம் வெறும் 15 ரூபாய்யாக குறையும்.
35
பயணிகள் வரவேற்பு! மிகுந்த உற்சாகம்!
தற்போதைய கட்டணத்தின்படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஒருமுறை பயணம் மேற்கொள்ள கட்டண மையங்களில் ரூபாய் 445 செலுத்த வேண்டும். மாதம் இருமுறை சென்றுவர, பயனர்கள் வருடத்திற்கு 10,680 ரூபாய் செலுத்த வேண்டும். புதிய வருடாந்திர பயண அட்டை மூலம், பயனர்கள் 7,680 ரூபாய் சேமிக்க முடியும். 56 முறை கூடுதலாக கட்டண மையங்களை கடக்கவும் இந்த நடைமுறை உதவும். இதேபோல், சென்னை திருச்சி வழித்தடத்தில் பயணிக்கும் பயனர்கள் 8,880 ரூபாய் வரை சேமிக்கவும், 7 கட்டண மையங்களை 168 முறை கடக்கவும் இந்த வருடாந்திர பயண அட்டை நடைமுறை உதவுகிறது.
ராஜ்மார்க் யாத்ரா செயலி மற்றும் என்.எச்.ஏ.ஐ. இணையதளம் மூலம் மட்டுமே இந்த வருடாந்திர பயண அட்டையை பெறமுடியும். மேலும் இந்த பயண அட்டை, வாகனம் தொடர்புடைய ஃபாஸ்ட்டிராக்கின் தகுதி சரிபார்க்கப்பட்ட பின் செயல்படுத்தப்படும்.
55
இதனை செய்யாதீர்கள்...!
வாஹன் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின், வருடாந்திர பயண அட்டையை, வணிகம் அல்லாத மற்றும் தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எந்த வணிக வாகனத்திலும் இந்த பயண அட்டை பயன்படுத்தப்பட்டால் அது உடனடியாக செயலிழந்துவிடும்.