ராயல் என்பீல்ட் ஹண்டர் 350-க்கு நேரடி போட்டியாக பார்க்கப்படும் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 தற்போது புதிய அப்டேட்டுடன் வந்துள்ளது. இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை முன்னிட்டு எக்ஸ்எஸ்ஆர்155-ஐ புதிய ‘மெட்டாலிக் பிளாக்’ நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ரூ.1,58,990 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) எந்த விலையில் கிடைக்கிறது. பிரீமியம் தோற்றத்துடன் வரும் இந்த மாடல், ரோட்டில் பார்வையை கவரும் வகையில் உள்ளது. புதிய மெட்டாலிக் பிளாக் நிறத்துடன், தங்க நிற அப்சைட் டவுன் முன்புற ஃபோர்க்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் தங்க நிறங்களின் கலவையால் பைக் மேலும் ஸ்டைலிஷ் மற்றும் சக்திவாய்ந்த தோற்றத்தை பெறுகிறது. இதன் ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பு, வலுவான ஃபியூல் டேங்க், எளிய உடல் அமைப்பு போன்ற அம்சங்கள் மாறாமல் தொடர்கின்றன. கிளாசிக் லுக் விரும்பும் ரைடர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், லைட்வெயிட் மற்றும் பேலன்ஸ் ஆன அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது.