Petrol Tank: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சொல்லாத ரகசியம்.. டேங்க் ஃபுல் செய்தால் வாகனம் வெடிக்குமா..?

Published : Mar 26, 2026, 10:41 PM IST

நிறைய பேர் பெட்ரோல் பங்க் போனா, 'டேங்க்க ஃபுல் பண்ணுங்க'னு சொல்றத பெருமையா நெனைக்கிறாங்க. ஆனா, இந்த பழக்கம் உங்க வண்டிக்கும் பட்ஜெட்டுக்கும் ஆபத்து. அதுக்கான அறிவியல் காரணம் இதோ.

PREV
15
பெட்ரோல் பரவுவதற்கு இடம் தேவைப்படுகிறது

பெட்ரோல் ஒரு திரவப் பொருள். சூடாகும்போது அது விரிவடையும். பங்க்ல பூமிக்கு அடியில இருக்கற டேங்க்ல பெட்ரோல் கூலா இருக்கும். ஆனா, உங்க வண்டி டேங்க்குக்கு வந்ததும், வெளியில இருக்கற வெப்பத்தால அது விரிவடைய ஆரம்பிக்கும். நீங்க டேங்க்கை முக்கால்வாசிக்கு மேல நிரப்பும்போது, பெட்ரோல் விரிவடைய இடம் இல்லாம, டேங்க்குக்குள்ள அழுத்தம் அதிகமாகும்.

25
'ஆவியாதல் உமிழ்வு அமைப்பு' திணறுகிறது
இப்போ வர்ற எல்லா கார்கள்லயும் EVAP (Evaporative Emission System)னு ஒரு சிஸ்டம் இருக்கும். பெட்ரோல்ல இருந்து வர்ற ஆவியை (Vapors) சேகரிச்சு, இன்ஜினுக்கு அனுப்பி எரிக்கிறதுதான் இதோட வேலை. நீங்க டேங்க் ஃபுல் பண்ணும்போது, இந்த சிஸ்டம் ஆவிக்கு பதிலா, பெட்ரோலையே உறிஞ்ச ஆரம்பிச்சிடும். இதனால, 'சார்கோல் கேனிஸ்டர்' (charcoal canister) பழுதாகி, ஆயிரக்கணக்குல செலவு வைக்கும்.
35
எடை அதிகரித்தால், மைலேஜ் குறையும்
இது சிம்பிள் கணக்குதான். பெட்ரோல் அதிகமாக அதிகமாக, வண்டியோட வெயிட் கூடும். நீங்க எப்பவும் டேங்க் ஃபுல்லா வெச்சிருந்தா, வண்டி மேல கூடுதல் சுமை இருக்கும். இதனால, இன்ஜின் வண்டியை இழுக்க அதிக சக்தி செலவிடும். முடிவு? உங்க மைலேஜ் குறையும். அதாவது, பெட்ரோலை மிச்சம் பிடிக்க நெனச்சு, நீங்க அதிக பெட்ரோலை செலவு செய்வீங்க.
45
கசிவு மற்றும் தீ அபாயம்
டேங்க்கை முட்ட முட்ட நிரப்பும்போது, பெட்ரோல் வழிஞ்சு வெளியே வர வாய்ப்பிருக்கு. வண்டியை வெயில்ல நிறுத்தி வெச்சிருந்தா, பெட்ரோல் விரிவடைஞ்சு வெளிய வழிஞ்சா, வண்டியோட பெயின்ட் பாதிப்பாகுறதோட, தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கு. பெட்ரோல் மூடியில இருக்கற சின்ன துவாரம் (Vent) வழியா கேஸ் வெளியேறணும். ஆனா, டேங்க் ஃபுல்லா இருந்தா, அது வழியா பெட்ரோலே கசிய ஆரம்பிக்கும்.
55
சரியான வழி எது?
ஆட்டோமொபைல் இன்ஜினீயர்கள் சொல்றபடி, வண்டி டேங்க்கை எப்பவும் பாதி அல்லது முக்கால்வாசி (3/4th) அளவுக்கு நிரப்புறதுதான் சரி. இதனால, பெட்ரோல் விரிவடைய போதுமான இடம் கிடைக்கும், ஆவியோட அழுத்தம் சரியா இருக்கும், வண்டியோட எடையும் சமநிலையில இருக்கும்.
Read more Photos on
click me!

Recommended Stories