Facts: பைக்குக்கு பெரிய டயர், ஸ்கூட்டிக்கு சின்ன டயர் ஏன்? அட! இப்படி ஒரு காரணமா?

Published : Sep 18, 2026, 03:30 PM IST

Bike vs Scooter Tyre Size: தினமும் பைக், ஸ்கூட்டியில் நாம் பயணம் செய்தாலும், அதோட டயர் சைஸை பெரிதாக கவனிக்க மாட்டோம். பைக்குக்கு பெரிய டயரும், ஸ்கூட்டிக்கு சின்ன டயரும் ஏன் கொடுக்கிறார்கள் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
பைக், ஸ்கூட்டி டயர் சைஸில் வித்தியாசம் ஏன்?

பைக், ஸ்கூட்டி இரண்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தும் வாகனங்கள் தான். ஆனால், இந்த இரண்டையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் ஒரு சின்ன வித்தியாசம் தெரியும். அதுதான் டயர் சைஸ். பைக்குக்கு பெரிய டயரும், ஸ்கூட்டிக்கு சின்ன டயரும் கொடுத்திருப்பார்கள். இதற்குப் பின்னாடி இருக்கும் உண்மையான காரணம் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.

24
பைக்குக்கு ஏன் பெரிய டயர்?

பைக்குகளில் பெரிய டயர் கொடுக்க முக்கிய காரணம், ரோட்டில் அது கொடுக்கிற பிடிமானம் (கிரிப்) தான். நாம் வேகமாகப் போகும்போது குழி, கல், ஸ்பீட் பிரேக்கர் என்று நிறைய தடைகள் வரும். பெரிய டயர் இருந்தால் இதையெல்லாம் எளிதாகக் கடந்து போகலாம்.

அதுமட்டுமில்லாமல், நெடுந்தூர பயணம் செல்வதற்கும், நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டுவதற்கும் பைக்கைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவோம். அதனால், வண்டி பேலன்ஸாக இருக்க பெரிய டயர்கள் ரொம்பவே உதவி செய்கிறது. வேகமாகப் போகும்போது பைக் கட்டுப்பாட்டில் இருக்க இது ரொம்ப முக்கியம். அதனால்தான் நிறைய பைக்குகளில் பெரிய சைஸ் டயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்கூட்டிக்கு ஏன் சின்ன டயர்?

ஸ்கூட்டி டயர் சின்னதாக இருப்பதற்கு அதன் வடிவமைப்புதான் முக்கிய காரணம். பைக்ல உட்காரும் நிலையிலும், ஸ்கூட்டியில் உட்காரும் நிலையிலும் வேறுபாடு உண்டு. பைக்ல இன்ஜினுக்கு இரண்டு பக்கமும் காலை போட்டு உட்காருவோம். ஆனால், ஸ்கூட்டியில் காலை முன்னாடி வைத்துக் கொள்ள ஃப்ளோர் போர்டு இருக்கும். நாம் வசதியாக உட்கார்ந்து ஓட்டுவதற்கு ஏற்ற மாதிரி ஸ்கூட்டியை வடிவமைத்துள்ளனர். இந்த வடிவமைப்புக்கு சின்ன டயர்கள் தான் செட் ஆகும்.

34
கச்சிதமான வடிவமைப்பு

ஸ்கூட்டிகளை அதிகமாக சிட்டிக்குள் தான் பயன்படுத்துவோம். அலுவலகம், கல்லூரி, மார்க்கெட் என்று சின்ன சின்ன தூரம் செல்வதற்கு ஸ்கூட்டி ரொம்ப வசதியாக இருக்கும். சிட்டி டிராபிக்கில் வண்டியை மெதுவாக ஓட்ட வேண்டும், அடிக்கடி திருப்ப வேண்டும், பிரேக் போட வேண்டும். இந்த மாதிரி நேரங்களில் ஸ்கூட்டியின் கச்சிதமான வடிவமைப்பு ரொம்பவே கைகொடுக்கும்.

சின்ன டயர் இருந்தால் வண்டி சரியாக ஓடாது என்று நினைப்பது தவறு. டயர் சைஸ் மட்டுமே வண்டியின் திறனை முடிவு செய்யாது. டயரின் அகலம், ரப்பர் குவாலிட்டி, காற்று, சாலையின் நிலைமை, வண்டியின் எடை என்று நிறைய விஷயங்கள் வண்டி எப்படி ஓடுகிறது என்பதை முடிவு பண்ணுகிறது.

44
வாகனத்திற்கு ஏற்ற வடிவமைப்பு

எல்லா பைக்குக்கும் பெரிய டயர் தான் இருக்கும், எல்லா ஸ்கூட்டிக்கும் சின்ன டயர் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில ஸ்கூட்டிகளில் பெரிய டயரும், சில பைக்குகளில் சின்ன டயரும் பயன்படுத்துகிறார்கள். வண்டியின் மாடல், அது எதற்காகப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்து டயர் சைஸ் மாறும். இன்ஜினியர்கள் ஒவ்வொரு வண்டியையும் அதோட பயன்பாட்டுக்கு ஏற்ற மாதிரிதான் வடிவமைப்பார்கள். அதில் டயர் சைஸும் ஒரு முக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories