நிஸான் கிராவைட், ரெனால்ட் ட்ரைபர் ஆகிய இரண்டுமே ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட காம்பேக்ட் எம்பிவி கார்கள். இந்த இரண்டு மாடல்களிலுமே 71 bhp பவர், 96 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுத்திருக்காங்க. இதில் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கு. கிராவைட் மாடலில் ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி கிடைக்குது. ஆனா, ட்ரைபரில் டீலர் மூலமாகவோ அல்லது ஆஃப்டர் மார்க்கெட் மூலமாகவோ தான் சிஎன்ஜி கிட் பொருத்திக்கொள்ள முடியும்.
இந்த இரண்டு கார்களோட முக்கிய சிறப்பம்சமே, முழுமையாக கழற்றி எடுக்கக்கூடிய மூன்றாம் வரிசை இருக்கைகள் தான். இரண்டாம் வரிசை இருக்கைகளை மடக்கினால், பூட் ஸ்பேஸை 1,000 லிட்டருக்கு மேல் கூட்டிக்கொள்ள முடியும். 8 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் போன்ற வசதிகளும் இதில் இருக்கு. சென்னையில் கிராவைட் காரின் ஆன்-ரோடு விலை ரூ.6.92 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரையிலும், ட்ரைபர் காரின் விலை ரூ.6.85 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரையிலும் இருக்கு.