செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா? கண்டிப்பா இந்த 5 விஷயத்த நோட் பண்ணுங்க...

First Published | Aug 25, 2024, 11:23 PM IST

நல்ல விலையில் செகண்ட் ஹேண்ட் கார்கள் கிடைத்தால், அதை வாங்குவது சிக்கனமானதாக இருக்கும். ஆனால், வாங்கும் கார் சில விஷயங்களை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இத்தொகுப்பில் உள்ளன.

Buying a used car

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதற்கு ஏராளமான ஆன்லைன் வசதிகள் உள்ளன. சில சமயங்களில், அவற்றில் நல்ல விலையில் கார்கள் கிடைக்கலாம். அப்படி வாய்ப்பு கிடைத்தால், பயன்படுத்திய காரை வாங்குவது புத்திசாலித்தனமான மற்றும் சிக்கனமான தேர்வாக இருக்கும்.

Second hand Cars

ஆனால், சரியான காரைத் தேர்ந்தெடுப்பதற்கு கவனமாக இருக்க வேண்டும். அதற்கு திட்டமிடலும் தேவை. காரின் அளவு, எரிபொருள் திறன், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் உங்கள் தேர்வு என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்வது வசதியாக இருக்கும்.

Tap to resize

Old Cars

காரின் விலை மட்டுமல்ல, இன்சூரன்ஸ், பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளையும் உள்ளடக்கியே பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும். விரும்பும் குறிப்பிட்ட பிராண்ட், மாடல் போன்றவற்றை ஆராய வேண்டும். தேர்வு செய்யும் கார் எவ்வளவு நம்பகமானது என்பதையும் பார்க்க வேண்டும்.

Pre-owned Cars

காரின் பயன்பாட்டு வரலாற்றையும் பெறுவது முக்கியம். அதன் பராமரிப்புப் பதிவுகளைச் சரிபார்த்து, ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். விபத்தில் ஏதும் சிக்கி இருக்கிறதா என்றும் உரிமையாளர் விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் செக் பண்ணுவது நல்லது. விற்பனையாளரிடமிருந்து நேரடியாக வாங்கினால், காப்பீட்டுத் தொகை, ட்ராஃபிக் சலான்கள் மற்றும் காரில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்ற பதிவுகளை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும்.

Car buying tips

காரின் நிலையை ஒருமுறை முழுமையாக ஆய்வு செய்வது மிக அவசியம். சேதம், துரு இருப்பதற்கான அறிகுறி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். டயர்கள், பிரேக்குகள், விளக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஒரே ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்வதை மட்டும் நம்பி முடிவு எடுக்கக் கூடாது. ஒருசில முறை காரை ஓட்டிப் பார்த்து அது எப்படி இயங்குகிறது என்று மதிப்பிட வேண்டும்.

How to choose a pre-owned car?

பதிவுச் சான்றிதழ் (RC) உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் முக்கியம். உரிமையாளரின் பெயர், காரின் எஞ்சின் மற்றும் சேஸ் எண்கள் போன்ற விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். ஆர்சி நகல்தான் இருக்கிறது என்றால் விற்பனையாளரிடம் அதுபற்றி விசாரித்துக்கொள்ள வேண்டும்.

Used cars price

இறுதியாக, விற்பனையாளர் கேட்கும் விலையையும் அதே கார் புதிதாக என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முடிவெடுப்பதற்கு முன் காரின் நிலை, மைலேஜ் மற்றும் மற்ற அம்சங்களைக் கவனித்து திருப்திகரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட வேண்டும்.

Latest Videos

click me!