இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜனவரி மாதத்தில் தனது செடான் மற்றும் SUV மாடல்களுக்கு பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2025 மாடல் இயர் (MY2025) கார்களுக்கே இந்த சலுகைகள் பொருந்தும். பணத் தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் அல்லது லாயல்டி போனஸ், மேலும் ஸ்க்ராபேஜ் இன்சென்டிவ் என பல வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக எண்ட்ரி-லெவல் வேரியன்ட்களுக்கு அதிக நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.
வோல்க்ஸ்வேகன் Taigun SUV-யை எடுத்துக்கொண்டால், Comfortline என்ற அடிப்படை வேரியடுக்கு ரூ.1.04 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், Highline Plus AT வேரியன்டுக்கு ரூ.1 லட்சமும், GT Line AT-க்கு ரூ.80,000 அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சில உயர்ந்த வேரியன்ட்களில் ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. தற்போது Taigun காரின் விலை ரூ.11.42 லட்சம் முதல் ரூ.19.19 லட்சம் வரை உள்ளது. இந்த மாதலுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஃபேஸ்லிப்ட் அப்டேட் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.