வின்ஃபாஸ்ட் EV.. ஒரே ஒரு சார்ஜில் 450 கிமீ.. சென்னை டூ மதுரை பறக்கலாம்.. விலை இவ்வளவு கம்மியா?

Published : Feb 10, 2026, 07:22 PM IST

VinFast Limo Green EV: வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் களமிறங்க உள்ளது. இந்த மாடலின் விலை, சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து பார்ப்போம். 

PREV
13
குடும்ப கார்களுக்கு வரவேற்பு அதிகம்

இந்தியாவில் 7 அல்லது 8 பேர் குடும்பமாக பயணம் செய்யும் கார்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் 7 இருக்கைகள் கொண்ட இரண்டு குடும்ப கார்கள் அறிமுகமாக உள்ளன. அதாவது நிசான் கிராவிட் மற்றும் வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் ஆகிய மாடல்கள் கெத்தாக களமிறங்க உள்ளன.

வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் எலெக்ட்ரிக் கார் (VinFast Limo Green EV)

இதில் நாம் முதலாவது பார்க்கப் போவது வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் லிமோ கிரீன் மின்சார MPVகார் தான். இந்த மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

அறிமுகப்படுத்தப்படும்போது, ​​இது BYD eMax7 மற்றும் Kia Carens Clavis EV-க்கு போட்டியாக இருக்கும். உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்பெக் பதிப்பைப் போலவே, இந்தியாவிற்கு வரும் வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் 60.13kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும்.

23
ஒரே சார்ஜில் 450 கிமீ பயணிக்கலாம்

இது முன்-ஆக்சில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்படும். இந்த மாடல் 201bhp மற்றும் 280Nm டார்க்கை உற்பத்தி செய்யும். 80kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரி பேக்கை வெறும் 30 நிமிடங்களில் 10 முதல் 70% வரை சார்ஜ் செய்யலாம். 

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 450 கிமீ பயணம் செய்ய முடியும். அதாவது சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு முறை சார்ஜ் செய்தாலே பயணிக்கலாம். இந்த மாடலின் விலை ரூ.18 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33
நிசான் கிராவிடேட் மாடல் (Nissan Gravite)

அடுத்ததாக நாம் பார்க்கப்போவது நிசான் கிராவிடேட் மாடல் கார். புதிய மாடலில் V-மோஷன் முன் கிரில், சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்டி பம்பர், பானட்டில் 'கிராவிட்' பேட்ஜ், இரட்டை-ஸ்டிரிப் LED DRLகள் கொண்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன.

விலை எவ்வளவு?

கதவுகளில் பழுப்பு நிற செருகல்களுடன் கூடிய முழு-கருப்பு உட்புறம், குரோம் உச்சரிப்புகள் கொண்ட டேஷ்போர்டு மற்றும் மவுண்டட் கட்டுப்பாடுகளுடன் கூடிய மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல அம்சங்கள் கிடைக்கும் என சமீபத்திய டீஸர் உறுதிப்படுத்துகிறது. 

புதிய நிசான் குடும்ப கார் 72 bhp மற்றும் 96 Nm ஐ உற்பத்தி செய்ய போதுமானதாக இருக்கும் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories