இது கார் இல்ல.. முழு தியேட்டர்.. காருக்குள் சினிமா ஹால்.. இந்த SUV-வை பார்த்தீங்களா?

Published : Feb 10, 2026, 03:34 PM IST

மஹிந்திரா தனது புதிய XUV700 காரை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்தியாவின் முதல் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் ஆகும். காருக்குள் ஒரு தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

PREV
15
மஹிந்திரா டால்பி அட்மாஸ் கார்

மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய XUV7 XO ஒரு சாதாரண எஸ்யூவி அல்ல. இது சாலையில் ஓடும் ஒரு மொபைல் தியேட்டர் என்றே சொல்லலாம். காரில் இசை, படம், சீரீஸ் எல்லாம் ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த மாடல் ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, ஒரே காரில் டால்பி Vision மற்றும் டால்பி Atmos தொழில்நுட்பங்களை இணைத்திருப்பதே இதன் சிறப்பு.

25
காருக்குள் தியேட்டர்

டால்பி Laboratories உருவாக்கிய டால்பி Vision, திரையில் காணப்படும் காட்சிகளின் நிறம், ஒளிர்வு, சினிமா ஹால் அனுபவத்தை தருகிறது. மேலும் டால்பி Atmos, 3D சுற்றுச்சூழல் ஒலியுடன் இசை மற்றும் வசனங்களை கேட்கும் உணர்வை வழங்குகிறது. இதனால், காருக்குள் உட்கார்ந்தபடியே ஒரு தியேட்டரில் இருப்பது போல உணர முடிகிறது.

35
டால்பி விஷன் எஸ்யூவி

இந்த இன்கார் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டம் மூலம், கானா ஆப்பில் டால்பி அட்மாஸ் தரத்தில் பாடல்கள் கேட்கலாம். மேலும், Sony LIV மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ், லைவ் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டவை டால்பி Vision மற்றும் டால்பி Atmos உடன் நேரடியாக காரில் பார்க்க முடியும். இந்தியாவில் கார்களின் system-level-ல் கிடைக்கும் முதல் OTT பிளாட்பார்ம் Sony LIV என்பது குறிப்பிடத்தக்கது.

45
மஹிந்திரா புதிய கார்

என்ஜின் மற்றும் விலையைப் பார்த்தால், XUV7 XO 8 வகை variant-களிலும், 5 powertrain option-களிலும் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.66 லட்சம் முதல் ரூ.24.92 லட்சம் வரை உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள், கையேடு மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ்-களுடன் வழங்கப்படுகின்றன. டாப் டீசல் மாடலில் AWD வசதியும் உள்ளது.

55
மஹிந்திரா காரின் அம்சங்கள்

வசதிகளின் பட்டியல் இந்த காரை மேலும் கவர்ச்சிகரமாக்குகிறது. டிரிபிள் ஸ்கிரீன் அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான இருக்கைகள், 16-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, லெவல்-2 ADAS, 7 ஏர்பேக்குகள், 540 டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன், பாதுகாப்பிலும் இந்த எஸ்யூவி முன்னிலை உள்ளது. Global NCAP சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ள XUV7 XO, குடும்பப் பயணங்களுக்கு ஒரு நம்பகமான, எண்டர்டெயின்மென்ட் நிறைந்த தேர்வாகத் திகழ்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories