நீங்கள் தற்போது ஒரு காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த ஜூலை மாதத்திற்கு, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பல கார்களுக்கு ரூ.50,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் தள்ளுபடி வழங்கிய கார்களில் டியாகோ, அல்ட்ராஸ் ஹேட்ச்பேக், டிகோர் செடான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற எஸ்யூவிகள் அடங்கும். நீங்களும் கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்தச் சலுகைகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை காணலாம்.