Tata Aeris: 360 டிகிரி கேமரா, 21 கிமீ மைலேஜ்... வென்டிலேட்டட் சீட்ஸ் உடன் களமிறங்கிய புதிய டாடா ஏரிஸ்!

Published : Nov 12, 2026, 05:14 PM IST

ரூ.5.29 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா ஏரிஸ் (Tata Aeris) செடான் அறிமுகம்! வென்டிலேட்டட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா, மைலேஜ் & முழு விவரம் இதோ!

PREV
14
ரூ.5.29 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா ஏரிஸ் செடான் அறிமுகம்

இந்திய கார் சந்தையில் பட்ஜெட் விலையில் சொகுசு கார் வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பங்களின் பேராதரவைப் பெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது சப்-ஃபோர்-மீட்டர் செடான் கார் வரிசையில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த டாடா டிகோர் (Tata Tigor) காரின் ஃபேஸ்லிப்ட் மாடலுக்குப் பதிலாக, முற்றிலும் புதிய வடிவமைப்புடன் டாடா ஏரிஸ் (Tata Aeris) என்ற புத்தம் புதிய பிரீமியம் செடான் காரை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

24
விலை மற்றும் டெலிவரி விவரங்கள்

டெல்லியில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.5,29,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி அக்.11 முதல் தொடங்கி உள்ளன. டாடாவின் புகழ்பெற்ற டியாகோ ஹேட்ச்பேக் காரில் இடம்பெற்றுள்ள கூர்மையான முன்பக்க ஹெட்லேம்ப் அமைப்பைக் கொண்டது. முன்பக்க பம்பரில் கருப்பு நிற கிளாடிங்குகள் வெகுவாக குறைக்கப்பட்டு எலைட் தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய கருப்பு நிற ஓஆர்விஎம் (ORVM) கண்ணாடிகள், 15-இன்ச் டயர்கள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டெட் டெயில்-லைட் போன்ற தோற்றத்தை உருவாக்க பிரத்தியேக கிராபிக்ஸ் டிசைன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. டண்டேலி டிரிசில் (லாவண்டர்), நைட்ரோ கிரிம்சன் ரெட், டியூன் குளோ சாண்ட், டேடோனா கிரே, பியூர் கிரே மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய 6 வண்ணத் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கிறது.

34
சொகுசு உட்புறம் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள்

பட்ஜெட் விலையிலேயே உயர்ரக சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளை டாடா நிறுவனம் இதில் வழங்கியுள்ளது. டூயல்-டோன் சீட்களுடன் கூடிய பிரீமியம் கிரே தீம், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் நவீன டேஷ்போர்டு வடிவமைப்பு. செக்மென்டட் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் சென்டர் டச் ஸ்கிரீன், ரியர் ஏசி & ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கான ரோட்டரி டிரைவ் செலக்டர் கியர் நாப். பட்ஜெட் பிரிவிலேயே முன்பக்க இருக்கைகளுக்கு வென்டிலேட்டட் சீட்ஸ் வசதியும், டேஷ்கேமாகவும் (Dashcam) இரட்டைப் பணியாற்றும் அதிநவீன 360 டிகிரி கேமரா சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

44
இன்ஜின் திறன், கியர்பாக்ஸ் மற்றும் மைலேஜ்

தினசரி நகரப் பயன்பாடு & நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் டாடா ஏரிஸ் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள் 1.2-லிட்டர் பெட்ரோல் மாடல் 1.2-லிட்டர் ஐ-சிஎன்ஜி (i-CNG) மாடல்

அதிகபட்ச பவர் 85 bhp 74.5 bhp (CNG மோடில்)

அதிகபட்ச டார்க் 113 Nm 96.5 Nm (CNG மோடில்)

கியர்பாக்ஸ் 5MT & 5AMT 5MT & 5AMT

மைலேஜ் லிட்டருக்கு 19 – 21 கி.மீ. கிலோவிற்கு 26 – 28 கி.மீ.

குறிப்பாக, சிஎன்ஜி மாடலில் பூட் ஸ்பேஸ் இடவசதி பாதிக்காத வகையில், இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தின் கீழ் சீட்டுக்கு அடியில் 2 சிலிண்டர்கள் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய 2 மாடல்களிலுமே ஆட்டோமேட்டிக் (5AMT) கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட்டிருப்பது குடும்பப் பயணங்களுக்குப் பெரும் சௌகரியமாக அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories