முழு சார்ஜில் 326 கி.மீ பயணம்: டாடா பன்ச், நெக்ஸான் இ.வி-க்கு போட்டியாக களமிறங்கும் வின்ஃபாஸ்ட் VF5!

Published : Nov 12, 2026, 12:47 PM IST

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட VF5 ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

PREV
14
வின்ஃபாஸ்ட் VF5 எலெக்ட்ரிக் கார்

இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக வெளிநாட்டு நிறுவனங்களும் புதிய மாடல்களைக் களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் ஏற்கனவே 2 எலெக்ட்ரிக் கார்களுடன் சிறப்பான வர்த்தகத்தைத் தொடங்கியுள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், தற்போது தனது புதுப்பிக்கப்பட்ட VF5 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான டிசைன் காப்புரிமை இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் ஸ்பை (Spy) படங்களும் வெளியாகி வருகின்றன.

24
வெளிப்புற டிசைன் மாற்றங்கள்

முன்புறம் - தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பகுதி நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. மெல்லிய முன்பக்க விளக்குகள், பம்பரின் இருபுறங்களிலும் கீழ்ப்பகுதியில் முகப்பு விளக்குகள் (Headlamps), மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் குறைக்கப்பட்ட கருப்பு நிற அலங்காரப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பானட் டிசைனும் மாற்றப்பட்டுள்ளதால், பழைய மாடலைவிட இது முழுமையான எஸ்யூவி (SUV) தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சைடு டிசைன்- சைடு டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், வியட்நாமில் வெளியான ஸ்பை படங்களின்படி இதில் புதிய 16 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

பின்புறம் - பின்பகுதியில் தடிமனான புதிய எல்இடி (LED) டெயில் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இவை நடுவில் உள்ள ஒளிப்பட்டையால் இணைக்கப்பட்டு, அதன் மையப்பகுதியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற வாய்ப்புள்ளது.

அளவுகள் - காரின் அளவுகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடல் 3,967 மிமீ நீளம், 1,723 மிமீ அகலம், 1,580 மிமீ உயரம் மற்றும் 2,514 மிமீ வீல்பேஸ் அளவுகளைக் கொண்டுள்ளது.

34
உட்புற வசதிகள்

வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சிறிய ஸ்கிரீனுக்குப் பதிலாக பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் வசதி, ஓட்டுநருக்கான தகவல் ஸ்கிரீனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மற்றும் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெறலாம். மேலும், சென்டர் கன்சோலில் ரோட்டரி கியர் மற்றும் 2 கப் ஹோல்டர்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதோடு, உட்புறத்தில் கருப்பு நிற அலங்காரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
பேட்டரி & திறன் விவரங்கள்

சர்வதேச சந்தைகளில் வின்ஃபாஸ்ட் VF5 2 விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது

29.6 kWh பேட்டரி - இதில் உள்ள மின்மோட்டார் 90 எச்பி பவரையும், 135 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது முழு சார்ஜில் 268 கி.மீ வரை பயணிக்கும் (NEDC சான்றளிப்பு).

37.23 kWh பேட்டரி - இது முழு சார்ஜில் 326 கி.மீ ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்திய மாடலில் எந்த பேட்டரி வசதி வழங்கப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

புதிய வின்ஃபாஸ்ட் VF5 எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் இந்தக் கார், 30 kWh மற்றும் 45 kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும் டாடா நெக்ஸான் EV-க்கு முக்கியப் போட்டியாக அமையும். அத்துடன், டாடா பன்ச் EV சந்தையையும் இது குறிவைக்கும் வாய்ப்புள்ளது. இதன் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories