ரூ.30,000 கேஷ்பேக் ஆஃபரில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

First Published | Oct 10, 2024, 10:53 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.30,000 வரை அதிரடி கேஷ்பேக் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Cashback up to Rs 30,000

பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில், அனைத்து ஆட்டோ மொபைல் ஷோரூம்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் முன்னணி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.30,000 வரை சிறப்பு கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கிறது.

TVS cashback

இந்தச் சலுகை அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டும் கிடைக்கும். அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் இந்த சிறப்புச் சலுகை கிடைக்கும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Tap to resize

TVS iQube

iQube ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,999 இல் இருந்து தொடங்குகிறது. ஆனால், கேஷ்பேக் சலுகை மூலம் இந்த ஆரம்ப விலை ரூ.84,999 (எக்ஸ்-ஷோரூம்) இல் ஆரம்பமாகிறது. TVS iQube மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அவை iQube, iQube S மற்றும் iQube ST என அழைக்கப்படுகின்றன. பேசிக் மாடலான iQube மற்றும் டாப் மாடலான iQube ST ஆகியவை இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. அதேசமயம் மிட்-ஸ்பெக் iQube S ஒரே பேட்டரி ஆப்ஷனுடன் கிடைக்கிறது.

Cashback offer on TVS iQube

TVS iQube S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் பெறலாம் (5 ஆண்டுகள்/70000 கி.மீ.). இந்த எக்ஸ்ட்ரா வாரண்டிக்காக கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. சில மாநிலங்களில் TVS iQube 2.2 kWh மாடலுக்கு ரூ.17,300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 3.4 kWh மாடலுக்கு ரூ.20,000 வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது.

TVS Electric Scooter

ஜூலை 15, 2022க்கு முன் iQube ST மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், 5.1 kWh அல்லது 3.4 kWh ST ஸ்கூட்டர்களை வாங்கும்போது ரூ.10,000 லாயல்டி போனஸ் மூலம் பயனடையலாம். சில குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் ரூ.10,000 வரை கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். ரூ.7,999 வரை குறைவான முன்பணம் செலுத்தி, EMI முறையிலும் வாங்கலாம். எளிதான தவணையாக மாதம் ரூ.2,399 மட்டும் செலுத்தினால் போதும். இதுபோன்ற இன்னும் கவர்ச்சிகரமான சலுகைகளும் கிடைப்பதால் இந்த தீபாவளி ஆஃபரில் TVS iQube வாங்குவது லாபகரமாக இருக்கும்.

TVS iQube EV

iQube சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. 2.2 kWh பேட்டரி கொண்ட பேசிக் மாடல் 75 கிமீ ரேஞ்ச் கொடுக்கும். 3.3 kWh பேட்டரி கொண்ட மிட்-ஸ்பெக் வேரியண்ட் 100 கிமீ ரேஞ்ச் தரக்கூடியது. டாப்-ஸ்பெக் மாடலில் 5.1 kWh பேட்டரி இருக்கும். அதில் 150 கிமீ ரேஞ்ச் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களும் 4.4 kW மோட்டார் கொண்டவை. இந்த ஸ்கூட்டர் வெறும் 4.2 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

Latest Videos

click me!