TVS iQube S Launched: ஒரே சார்ஜில் 175 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் 50,000 கிமீ வாரண்டியுடன் மிரட்டலாக வந்த புதிய TVS iQube S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது இடத்தைப் பலப்படுத்த, TVS நிறுவனம் புதிய 'iQube S' மாடலை களமிறக்கியுள்ளது. இதில் 4.7 kWh திறன் கொண்ட பெரிய பேட்டரி இருப்பதால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ். முன்பு இருந்த 3.5 kWh வேரியன்ட்டிற்கு பதிலாக, இந்த சக்திவாய்ந்த மாடலை TVS கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் 4.4 kW உச்ச சக்தியை (Peak Power) வெளிப்படுத்தும் ஹப் மவுண்டட் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 Nm டார்க்கை வழங்குகிறது, இது மேடான சாலைகளில் எளிதாக பயணிக்க உதவும்.
24
டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை என்ன?
முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் போர்க்குகளும் (Telescopic Forks), பின்பக்கத்தில் ஹைட்ராலிக் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன, இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற சிறந்த சவாரி அனுபவத்தைத் தரும். சிறந்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த TVS iQube S ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,37,142 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
175 கிமீ ரேஞ்ச்
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 175 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என நிறுவனம் உறுதியளிக்கிறது. இனி ரேஞ்ச் கவலை இல்லை. இதில் 4.7 kWh லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. IP67 ரேட்டிங் பெற்றிருப்பதால், தூசி மற்றும் தண்ணீரால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. போர்ட்டபிள் சார்ஜர் மூலம், 4 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் ஏற்றிவிடலாம்.
34
பட்டைய கிளப்பும் ஸ்பீடு
இந்த ஸ்கூட்டர் மணிக்கு 82 கிலோமீட்டர் டாப் ஸ்பீடில் செல்லும். வெறும் 4.3 வினாடிகளில் 0-விலிருந்து 40 கி.மீ வேகத்தை எட்டிவிடும். முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் டிரம் பிரேக் மற்றும் 'ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்' வசதியும் இதில் உள்ளது. இதில் 17.78 செ.மீ TFT டிஸ்ப்ளே, ஜாய்ஸ்டிக் கண்ட்ரோல், நேவிகேஷன், கால்/எஸ்எம்எஸ் அலெர்ட், ஆன்டி-தெஃப்ட், க்ராஷ் அலெர்ட் என 118-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன. வாய்ஸ் கமெண்டிற்காக 'Alexa' சப்போர்ட்டும், ரிவர்ஸ் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.
சீட்டுக்கு அடியில் 32 லிட்டர் இடவசதி உள்ளது, இதில் இரண்டு ஹெல்மெட்களை வைக்கலாம். USB சார்ஜிங் போர்ட்டும் உண்டு. மேக்னிஃபிசென்ஸ் பர்பிள், ஹார்லெக்வின் ப்ளூ, மெர்குரி கிரே என மூன்று புதிய நிறங்களில் இது கிடைக்கிறது. பேட்டரிக்கு 50,000 கி.மீ. வரை வாரண்டி உண்டு.'TVS SmartXonnect' செயலி மூலம் உங்கள் ஸ்கூட்டரின் பேட்டரி நிலை, கடைசியாக நிறுத்திய இடம் மற்றும் சர்வீஸ் அலெர்ட் போன்றவற்றை போன் மூலமே தெரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தத்தில் இந்த மாடல் Ather 450X, Ola S1 Pro மற்றும் Bajaj Chetak போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடிப் போட்டியாக அமைகிறது.