Citroen C3 : மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான கார்களில் சிட்ரன் (Citroen) C3 முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மாருதி மற்றும் ரெனோ நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள இந்த காரின் தற்போதைய நிலவரம் மற்றும் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
சிறந்த இன்ஜின்: 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு விருப்பங்களில் இது கிடைக்கிறது. இரண்டுமே மிக மென்மையான (Smooth) பயண அனுபவத்தைத் தருகின்றன.
பயண சொகுசு: இதன் சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் கார் ஓட்டும் அனுபவம் மிகவும் சிறப்பாக உள்ளது.
விலை: விலையேற்றத்திற்குப் பின்பும் இதன் ஆரம்ப விலை ரூ.4.99 லட்சமாகவே (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது, இது பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
24
Citroen C3 காரின் குறைகள்
குறைவான வசதிகள்: பட்ஜெட் விலையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்தில் பல அடிப்படை வசதிகளை சிட்ரன் நிறுவனம் தவிர்த்திருந்தது. எனினும், தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து வசதிகளை மேம்படுத்தியுள்ளது.
விற்பனை மற்றும் சேவை மையங்கள்: இந்தியா முழுவதும் சுமார் 200 ஷோரூம்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்களுக்குச் சேவை மையங்களை அணுகுவதில் சிரமம் உள்ளது.
34
முக்கிய தொழில்நுட்ப விவரங்கள்
வேரியன்ட்கள்: லைன் (Live), ஃபீல் (Feel) மற்றும் ஷைன் (Shine).
செயல்திறன்: NA பெட்ரோல் இன்ஜின் 82 hp பவரையும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 110 hp பவரையும் வெளிப்படுத்தும்.
கியர்பாக்ஸ்: 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வர்ட்டர்) ஆப்ஷன்கள் உள்ளன.
அதிக வசதிகளை விட, இன்ஜின் தரம் மற்றும் கார் ஓட்டும் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிட்ரன் C3-யைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக, உங்கள் வீட்டிற்கு அருகில் இதன் ஷோரூம் அல்லது சர்வீஸ் சென்டர் இருந்தால், தாராளமாக இந்தப் காரைப் பரிசீலிக்கலாம்.