டியாகோ எலக்ட்ரிக் காரில் இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன. இந்த EV வெறும் 5.7 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கி.மீ வேகத்தை எட்டிவிடும். இதில் 8-ஸ்பீக்கர் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், எலக்ட்ரிக் ORVM-கள் என பல அம்சங்கள் உள்ளன. டாடா நிறுவனத்தின் டியோகா EV தான் இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆகும். இதன் பேட்டரி மற்றும் மோட்டார்களுக்கு டாடா நிறுவனம் எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டி வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் உண்மையான ரேஞ்ச் 315 கி.மீ வரை உள்ளது.
முக்கிய அறிவிப்பு: டாடா காருக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் தள்ளுபடிகள் மாநிலங்கள், நகரங்கள், டீலர்ஷிப்கள், கையிருப்பு, காரின் நிறம் மற்றும் வேரியன்ட் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அதாவது, இந்த தள்ளுபடி உங்கள் நகரத்திலோ அல்லது டீலரிடமோ அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். எனவே, காரை வாங்குவதற்கு முன், சரியான தள்ளுபடி விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்புகொள்ளவும்.