Top 5 High Range Electric SUV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ பயணம்! 5 மெகா எலக்ட்ரிக் SUV மாடல்கள்! விலை, சிறப்பம்சங்கள்!

Published : May 07, 2026, 01:49 PM IST

Electric SUVs: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி அந்த கவலை வேண்டாம். இந்திய மார்க்கெட்டில் அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 எலக்ட்ரிக் SUV-கள் பற்றி இங்கே பார்க்கலாம். ஒரே சார்ஜில் செய்தால் 682 கி.மீ வரை பயணிக்கலாம்.

PREV
15
ஃபுல் சார்ஜில் 680 கி.மீ. பயணம் 5 எலக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோமீட்டர் பயணிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு என்பதால் அதிகளவிலான பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை விரும்புகின்றனர். ஆனால், எலக்ட்ரிக் கார் என்றாலே 'ரேஞ்ச்' பற்றிய சந்தேகம் வரும். அந்த கவலையை போக்கும் வகையில், அதிக ரேஞ்ச் தரும் 5 எலக்ட்ரிக் SUV-கள் கார்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

25
மாருதி சுஸுகி இ-விட்டாரா

மாருதி சுஸுகியின் இந்த காருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இது 49kWh, 61kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் BYD தயாரித்த பிளேடு செல் LFP பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பெரிய பேட்டரி பேக், ஒரே சார்ஜில் 543 கிலோமீட்டர் ரேஞ்ச் தருகிறது. இதன் விலை சுமார் ரூ.15.99 லட்சம் முதல் ரூ.20.01 லட்சம் வரை இருக்கும்.

35
ரேஞ்சில் கில்லி: மஹிந்திரா BE 6

மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் SUV ரேஞ்ச் விஷயத்தில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதில் 59kWh, 79kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் பெரிய பேட்டரி பேக் 286 hp பவரையும், 380 Nm டார்க்கையும் தருகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இது 682 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.90 லட்சம் முதல் ரூ.28.49 லட்சம் வரை.

45
பவர்ஃபுல் மஹிந்திரா XEV 9e

மஹிந்திரா நிறுவனம் XEV 9e என்ற மற்றொரு சக்திவாய்ந்த SUV-யை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் 59kWh, 70kWh, 79kWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் பெரிய பேட்டரி 286hp பவரை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 679 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.95 லட்சத்தில் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை உள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

55
டாடா ஹாரியர் EV

டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் கார்களில் ஹாரியர் EV-யும் ஒன்று. இது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பது மட்டுமல்லாமல், செயல்திறனிலும் சிறந்தது. இதில் 75kWh பேட்டரி பேக் உள்ளது. இது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒரே சார்ஜில் இது 627 கிலோமீட்டர் ரேஞ்ச் தருகிறது. இதன் விலை ரூ.21.49 லட்சம் முதல் ரூ.30.23 லட்சம் வரை.

Read more Photos on
click me!

Recommended Stories