ஓலா, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் TVS iQube - விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jun 14, 2023, 09:05 PM IST

டிவிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் (TVS iQube) விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
ஓலா, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் TVS iQube -  விலை எவ்வளவு தெரியுமா?

TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது Ola S1, Ather 450X மற்றும் Bajaj Chetak போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டெல்லிக்கான டிவிஎஸ் ஐக்யூப் வண்டிக்கான  புதிய விலையை வெளியிட்டுள்ளது. FAME-II மானியத்தின் திருத்தத்திற்குப் பிந்தைய புதிய விலைகள் இவை என்பவை குறிப்பிடத்தக்கது.

24

மே 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, டெல்லியில் TVS iQube இன் ஆன்ரோடு விலை ரூ.1,16,184 ஆகவும், TVS iQube S-ன் விலை ரூ.1,28,849 ஆகவும் உள்ளது. மே 21 முதல் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு, டெல்லியில் TVS iQube இன் ஆன்ரோடு விலை ரூ.1,23,184 ஆகவும், TVS iQube S-ன் ரூ.1,38,289 ஆகவும் உள்ளது.

34

TVS மே மாதத்தில் iQube இன் 20,000 யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்தது.  FY23 இல், நிறுவனம் 1,00,000 யூனிட் மின்சார ஸ்கூட்டர்களை விற்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ளார் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் மூத்த துணைத் தலைவர் மனு சக்சேனா.

44

அவர், “TVS மோட்டார் நாட்டில் EV மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த மின்மயமாக்கல் பயணத்தின் ஆதரவுடன், TVS iQube அதன் வரம்பில் 1,00,000 யூனிட்களின் விற்பனை மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது” என்று கூறினார்.டிவிஎஸ் ஐக்யூப் Ola S1, Ather 450X மற்றும் Bajaj Chetak போன்றவற்றுக்கு பயங்கர போட்டியாக உள்ளது.

புது போன் வாங்க போறீங்களா.. ஆல் ஏரியாவில் பட்டையை கிளப்பும் Nothing Phone 2 வரப்போகுது !!

Read more Photos on
click me!

Recommended Stories