பக்கவாட்டு மோதல் சோதனையில், தலை மற்றும் மார்பு பகுதிக்கான பாதுகாப்பில் இந்த கார் மிகவும் மோசமான ரேட்டிங்கைப் பெற்றது. இதற்குக் முக்கிய காரணம், காரில் சைடு ஹெட் புரொடெக்ஷன் ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக இல்லாததுதான். இதன் காரணமாக, சைடு போல் இம்பாக்ட் சோதனையும் செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பொறுத்தவரை, மூன்று வயது குழந்தை பொம்மையின் தலை, முன்பக்க மோதலின்போது காரின் உட்புறத்தில் மோதியது. பக்கவாட்டு மோதல் சோதனையிலும் பொம்மையின் தலையில் அடிபட்டது. இருந்தபோதிலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மொத்தமாக 49-க்கு 29.33 புள்ளிகளைப் பெற்று, இந்த கார் மூன்று ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
டொயோட்டா நிறுவனம் கூறியது என்ன?
தென்னாப்பிரிக்க சந்தைக்கான ஸ்டார்லெட் காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருவதாக, கார் டெலிவரி மற்றும் சோதனை நேரத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களிடம் தெரிவித்ததாக குளோபல் NCAP கூறியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனில் இப்போது சைடு ஹெட் மற்றும் பாடி ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இந்த புதிய மாடலை குளோபல் NCAP ஏற்கெனவே வாங்கியுள்ளதாகவும், இரண்டு வெர்ஷன்களையும் வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக, விரைவில் அதையும் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.