ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 கார்கள்! பழசானாலும் மவுசு குறையாது!!

First Published Sep 9, 2024, 9:16 AM IST

சில கார்கள் குறைவான உற்பத்தி, கிளாசிக் வடிவமைப்பு மற்றும் ஆடம்பர வசதிகளைக் கொண்டிருக்கின்றன. அவை பழசானாலும் வாகனங்கள் சேகரிப்பாளர்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அந்த வகையில் கார் பிரியர்கள் அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கிய டாப் 5 கார்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe

1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe, மே 2022 இல் ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த கார் ஆகும். இது ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தில் நடந்த ஏலத்தின் போது 142 மில்லியன் டாலருக்கு விலைபோனது.

1962 Ferrari 330 LM 250 GTO

நவம்பர் 2023 இல் நியூயார்க் நகரில் RM Sotheby's ஏலத்தில் 1962 ஃபெராரி 330 LM / 250 GTO ஸ்காக்லிட்டியின் 51,705,000 டாலருக்கு விற்கப்பட்டது.

Latest Videos


1962 Ferrari 250 GTO

1962 ஃபெராரி 250 GTO கார் 2018 இல் RM Sotheby's ஏலத்தில் 48.4 மில்லியன் டாலர் என்ற பெரிய விலையில் விற்கப்பட்டது.

1962 Ferrari 250 GTO

2014ஆம் ஆண்டில், கலிபோர்னியாவின் கார்மலில் உள்ள போன்ஹாம்ஸ் குயில் லாட்ஜ் ஏலத்தில் 1962 ஃபெராரி 250 GTO காரை ஒருவர் 38,115,000 டாலர் கொடுத்து வாங்கினார்.

1957 Ferrari 335 S

1957 ஃபெராரி 335 எஸ் ஸ்பைடர் ஸ்காக்லிட்டி பிப்ரவரி 2016 இல் பாரிஸில் நடந்த ஏலத்தில் $35.7 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

click me!