Automatic Cars: இந்தியாவில் 9 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த பட்டியலில் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் எக்ஸ்டர் என ஏராளமான கார்கள் உள்ளன.
ரூ.9 லட்சத்துக்குள் கிடைக்கும் ஆட்டோமெட்டிக் கார்கள்
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களின் மவுசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களின் டிராஃபிக்கில் அடிக்கடி கியர் மாற்றி, கிளட்ச் மிதித்து கால் வலிக்காமல் இருக்க, பலரும் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு மாறி வருகின்றனர்.
9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்க நினைப்பவர்களுக்கு மார்க்கெட்டில் பல ஆப்ஷன்கள் உள்ளன. மாருதி சுஸுகி, ஹூண்டாய், ரெனோ போன்ற முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மும்பை ஆன்-ரோடு விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. AMT கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
25
மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift)
இந்தப் பட்டியலில் முதல் மாடல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட். பல ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான ஒரு ஹேட்ச்பேக் கார். மாருதி சுஸுகியின் பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் ஸ்விஃப்ட்டின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று. 1.2 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஸ்விஃப்ட்டுக்கு உள்ளது.
இந்த இன்ஜின் 80 hp பவரையும், 111.7 Nm டார்க்கையும் உருவாக்கும். ஒரு லிட்டருக்கு 24.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது. பெட்ரோல் AMT வேரியன்ட்டின் மும்பை ஆன்-ரோடு விலை 8.39 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் வேரியன்ட்டான ZXI ப்ளஸ் டூயல் டோனின் விலை 10.44 லட்சம் ரூபாய்.
35
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)
ஹேட்ச்பேக்கிற்கு பதிலாக ஒரு சிறிய SUV வேண்டுமென்றால், ஹூண்டாய் எக்ஸ்டரை நீங்கள் பரிசீலிக்கலாம். 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் எக்ஸ்டருக்கு இருக்கிறது. இந்த இன்ஜின் 82 hp பவரையும், 114 Nm டார்க்கையும் வழங்கும். AMT கியர்பாக்ஸ் கொண்ட HX3 வேரியன்ட்டின் மும்பை ஆன்-ரோடு விலை 8.24 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இதன் பேஸ் வேரியன்ட்டில் மற்ற மாடல்களை விட சில வசதிகள் குறைவாக இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஒன்பது லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆப்ஷன் ரெனோ கைகர். இதில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 71 hp பவரையும், 96 Nm டார்க்கையும் உருவாக்கும். 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 405 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை கைகரின் முக்கிய சிறப்பம்சங்கள்.
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், PM2.5 ஏர் பியூரிஃபையர் போன்ற வசதிகளும் இந்த காரில் கிடைக்கின்றன. AMT வேரியன்ட்டின் மும்பை ஆன்-ரோடு விலை 8.17 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆனால், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாயுடன் ஒப்பிடும்போது ரெனோவின் சர்வீஸ் நெட்வொர்க் சற்று குறைவு என்பதை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும்.
55
மாருதி பலேனோ (Maruti Baleno)
இந்தப் பட்டியலில் உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் முக்கியமானது மாருதி பலேனோ. விசாலமான கேபின் மற்றும் பல நவீன வசதிகள்தான் பலேனோவின் முக்கிய ஈர்ப்பு. 2026 அப்டேட்டிற்குப் பிறகு, வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள், லெதரெட் சீட்கள், கூல்டு வயர்லெஸ் போன் சார்ஜர், லெவல்-2 ADAS, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் இந்த காரில் கிடைக்கின்றன. பெட்ரோல் AMT வேரியன்ட்டின் மும்பை ஆன்-ரோடு விலை 8.81 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 9 லட்சம் ரூபாய்க்குள் ஆட்டோமேட்டிக் கார் தேடுபவர்களுக்கு பலேனோவும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.