Cruiser Bikes: லாங் ரைடு போகலாம்! ரூ.3 லட்சத்திற்குள் டாப் 6 க்ரூஸர் பைக்குகள் இதோ!

Published : Jun 28, 2026, 08:08 PM IST

Cruiser Bikes: இந்தியாவில் க்ரூஸர் பைக்குகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில், ரூ.3 லட்சத்துக்குள் கிடைக்கும் க்ரூஸர் பைக்குகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
கெத்து காட்டும் க்ரூஸர் பைக்குகள்

இந்தியாவில் இப்போது க்ரூஸர் பைக்குகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு இந்த பைக்குள் மீது தனி பிரியம் வந்துள்ளது. நீங்கள் 3 லட்சம் ரூபாய்க்குள் ஒரு நல்ல க்ரூஸர் பைக் வாங்க நினைத்தால், இந்த 6 பைக்குகள் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். சொகுசான இருக்கை, குறைவான சீட் உயரம், ரிலாக்ஸான ரைடிங் பொசிஷன், மற்றும் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் ஓட்டுவதற்கான வசதி என பல காரணங்களுக்காக க்ரூஸர் பைக்குகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

26
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350)

இந்த லிஸ்டில் முதலில் இருப்பது ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350. இதில் 349cc ஏர்-ஆயில் கூல்டு J-சீரிஸ் இன்ஜின் உள்ளது. இது 20.2 bhp பவரையும், 27 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், வசதியான சீட், முன்புறம் நீட்டிக்கப்பட்ட ஃபுட்பெக்ஸ் மற்றும் ரிலாக்ஸான ஹேண்டில்பார் இதில் உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டில், பயணிகளுக்கான பேக்ரெஸ்ட்டும் ஃபேக்டரி-ஃபிட்டடாக கிடைக்கிறது. இந்த பைக், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் மிகவும் ஸ்மூத்தாக செல்லும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

36
பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 (Bajaj Avenger Cruise 220)

இந்த பைக்கில் 220cc ஆயில்-கூல்டு DTS-i இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18.7 bhp பவரையும், 17.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. வெறும் 737 மிமீ சீட் உயரம், அகலமான ஹேண்டில்பார் மற்றும் முன்பக்கத்தில் நீண்ட விண்ட்ஷீல்டு என அசத்துகிறது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு உண்மையான க்ரூஸர் பைக் லுக்கையும், பஜாஜின் நாடு தழுவிய சர்வீஸ் நெட்வொர்க்கையும் கொண்டிருப்பதால், இந்த மாடலின் பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

46
ஜாவா பெராக் (Jawa Perak)

ஜாவா பெராக் மாடலில் 334cc லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது 29.5 bhp பவரையும், 32.7 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. 750 மிமீ உயரமுள்ள சிங்கிள்-ஃப்ளோட்டிங் டேன் லெதர் சேடில் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் ஆகியவை இந்த பைக்கிற்கு ஒரு ரெட்ரோ-ஸ்டெல்த் கஸ்டம் லுக்கை கொடுக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

56
யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster)

இதில் 334cc லிக்விட்-கூல்டு இன்ஜின் உள்ளது. முன்புற ஃபுட்பெக்ஸ், குறைவான சீட் மற்றும் மஸ்குலர் டிசைனுடன், இதில் பார்-எண்ட் மிரர்களும் உள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.97 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

66
ஹார்லி-டேவிட்சன் X440 (Harley-Davidson X440)

இதில் சக்திவாய்ந்த 440cc ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் உள்ளது. இது 27 bhp பவரையும், 38 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு சிறந்த லோ-எண்ட் பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.59 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

கீவே கே-லைட் 250V (Keeway K-Light 250V)

இந்த பைக்கில் 249cc ஏர்-கூல்டு V-ட்வின் இன்ஜின் உள்ளது. இது 18.7 bhp பவரையும், 19 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அகலமான ஃபுட் கண்ட்ரோல், மஸ்குலர் பாடிவொர்க் ஆகியவை இந்த மாடலில் உள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories