Hero Passion Plus: ஹீரோவின் மாஸ் என்ட்ரி! புதிய அம்சங்களுடன் 'பேஷன் பிளஸ் டிஸ்க்' பைக்.! விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jun 28, 2026, 09:57 AM IST

New Features: ஹீரோ நிறுவனம், தனது பிரபலமான கம்யூட்டர் பைக்கான பேஷன் பிளஸ் மாடலில், 'பேஷன் பிளஸ் டிஸ்க்' என்ற புதிய வேரியன்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

PREV
17
ஹீரோ நிறுவனம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஆண்டில் அதிக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் உலகளாவிய நிறுவனங்களின் பட்டியலில் ஹீரோ முதலிடத்தில் உள்ளது. இந்திய நடுத்தர வர்க்க மக்களின் நாடித் துடிப்பை அறிந்த ஹீரோ நிறுவனம், குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

27
பேஷன் பிளஸ் டிஸ்க்

இந்நிலையில் ஹீரோ நிறுவனம், தனது பேஷன் பிளஸ் பைக்கில் 'பேஷன் பிளஸ் டிஸ்க்' என்ற புதிய வேரியன்ட்டை களமிறக்கியுள்ளது. இது ஸ்டைலான தோற்றம் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.

37
பல்வேறு சிறப்பு அம்சங்கள்

முதல்முறை பைக் வாங்குவோர் மற்றும் இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் ஹீரோ இந்த பைக்கை வடிவமைத்துள்ளது. சிறந்த செயல்திறன், வசதி, மற்றும் எரிபொருள் சிக்கனம் மூன்றும் சேர்ந்த கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

47
புதிய டிஸ்க் பிரேக்

இந்த பைக்கின் முக்கிய அப்டேட் முன்பக்க சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய டிஸ்க் பிரேக் தான். இது வழக்கமான டிரம் பிரேக்குகளை விட சிறந்த பிரேக்கிங் திறனையும், பாதுகாப்பையும் பயணிகளுக்கு வழங்கும்.

57
LED புரொஜெக்டர் ஹெட்லைட்

ப்ளூடூத் இணைப்பு மூலம் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட்களைப் பெறலாம். ஆனால், நேவிகேஷன் அல்லது மியூசிக் கண்ட்ரோல் வசதிகள் இல்லை. மேலும், இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக LED புரொஜெக்டர் ஹெட்லைட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

67
ப்ளூடூத் இணைப்பு

ப்ளூடூத் இணைப்பு மூலம் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட்களைப் பெறலாம். ஆனால், நேவிகேஷன் அல்லது மியூசிக் கண்ட்ரோல் வசதிகள் இல்லை. மேலும், இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக LED புரொஜெக்டர் ஹெட்லைட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

77
ஷோரூம் விலை

ஹீரோ பேஷன் பிளஸ் டிஸ்க் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,128. அதே சமயம், டிரம் பிரேக் வேரியன்ட்டின் விலை ரூ.80,328. இந்த பைக் 100சிசி இன்ஜினுடன் வருகிறது. ஹெவி கிரே, டார்க் இண்டஸ்ட்ரியல் கிரே, நெக்ஸஸ் ப்ளூ, மற்றும் பேர்ல் ரெட் ஆகிய நான்கு டூயல்-டோன் வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories