விலையும் கம்மி.. வெயிட்டும் கம்மி.. பெண்களுக்கு ஏற்ற மாஸான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!

Published : Apr 20, 2026, 12:34 PM IST

Top 5 Best Scooters for Women: வெயிட் குறைவாகவும், விலை கம்மியாகவும் உள்ள பெண்களுக்கு ஏற்ற இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
16
பெண்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கலக்குகிறார்கள். ஆணகளுக்கு நிகராக, ஏன் ஆண்களை விட ஒருபடி மேலே போய் அசத்தி வருகிறார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் ஸ்கூட்டர்கள் மிகவும் முக்கிய தேவையாகி விட்டது. 

பெண்கள் விலை குறைவாகவும், எடை கம்மியாகவும், அதே வேளையில் நல்ல மைலேஜ் மற்றும் ரேஞ்ச் கொடுக்கும் ஸ்கூட்டர்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் வெயிட் கம்மியாகவும், விலை குறைவாகவும் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

26
ஹீரோ பிளஷர் பிளஸ் (Hero Pleasure+)

பெண்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களில் ஹீரோ பிளஷர் பிளஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் எடை 104 கிலோ மட்டுமே என்பதால் வண்டியை திருப்புவதும், ஸ்டாண்ட் போடுவது மிகவும் எளிதான விஷயமாகும். எடை குறைவாக இருப்பதால் டிராபிக்கிலும் ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கும். இதில் 110cc எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் விலை ரு.72,000 ல் இருந்து தொடங்குகிறது.

36
யமஹா ஃபாசினோ (Yamaha Fascino 125 Fi Hybrid)

ஸ்டைலான லுக் மற்றும் நல்ல மைலேஜ் தேடும் பெண்களுக்கு யமஹா ஃபாசினோ ஸ்கூட்டர் மிகச்சிறந்த தேர்வாகும். இதன் ரெட்ரோ லுக் பெண்களை மிகவும் கவரும். இந்தியாவின் எடை குறைந்த ஸ்ட்டரான இதன் எடை 99 கிலோ மட்டுமே. ஆகவே கையாளவதற்கு எளிதாக இருக்கும். இந்த மாடலில் ஹைபிரிட் எஞ்சின் தொழில்நுட்பம், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 55 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.81,000 ஆகும்.

46
ஹோண்டா டியோ (Honda Dio 110)

ஹோண்டா டியோ மாடலின் ஆக்கிலரேஷன் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் பயமில்லாமல் ஓட்டலாம். கல்லூரி மாணவிகளுக்கு மிகவும் பிடித்த ஸ்கூட்டர் இதுவாகும். இந்த மாடலில் முக்கிய அம்சமாக எக்ஸ்டெர்னல் ஃபியூயல் ஃபில்லிங் எனப்படும் ஸ்கூட்டரை விட்டு கிழே இறங்காமல் பெட்ரோல் போடும் வசதி உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.75,000 ல் இருந்து தொடங்குகிறது.

56
டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter 110)

பெண்கள் மத்தியில் பிரபலமான டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கால்களை வைக்க அதிக இடம் அதாவது பெரிய லெக்-ஸ்பேஸ் கொண்டுள்ளது. 21 லிட்டர் சீட் அண்டர் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சமாக 'ஈஸி சென்டர் ஸ்டாண்ட்' தொழில்நுட்பம் உள்ளதால் மிகக் குறைந்த பலத்தைப் பயன்படுத்தி வண்டியை ஸ்டாண்ட் போட முடியும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.86,000 ஆகும்.

66
ஹோண்டா ஆக்டிவா (Honda Activa 6G)

இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா அதிக பராமரிப்பு தேவையில்லாமல் நீண்ட காலம் உழைக்கும் என்பதால் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதன் மெட்டல் பாடி கூடுதல் பாதுகாப்பை கொடுக்கிறது. டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், சைலண்ட் ஸ்டார்ட் வசதி என ஏராளமான அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.89,000 ல் இருந்து தொடங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories