ரெனால்ட் டிரைபர், குறைந்த விலையில் 7 பேர் அமரக்கூடிய காரைத் தேடும் இந்திய நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. நெகிழ்வான இருக்கை அமைப்பு, 18-20 கி.மீ மைலேஜ், மற்றும் 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது.
கார் என்பது இந்திய நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சாதாரண வாகனம் அல்ல. அது ஒரு உணர்ச்சி. குறிப்பாக கூட்டு குடும்பங்கள் அதிகமாக உள்ள நிலையில், 7 பேர் அமரக்கூடிய கார்கள் மீது எப்போதும் நல்ல தேவை உள்ளது. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசதிகளுடன் ஒரு குடும்பக் காரை தேர்வு செய்வது சற்று கடினம். இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் ரெனால்ட் டிரைபர் பலருக்கும் ஒரு சரியான தேர்வாக மாறியுள்ளது.
25
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு
இந்திய சந்தையில் எம்பிவி பிரிவில் ரெனால்ட் டிரைபர் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2026 நிதியாண்டில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி, முந்தைய ஆண்டை விட கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த காரை வாங்கி வருகின்றன. அதிக விலை கொண்ட மாடல்கள் இருந்தாலும், குறைந்த விலையில் கிடைப்பதால் பலர் ட்ரைபரையே தேர்வு செய்கிறார்கள்.
35
ரெனால்ட் டிரைபர் அம்சங்கள்
வெளிப்புற வடிவமைப்பில் இந்த கார் ஒரு சிறிய எஸ்யூவி போல திகழ்கிறது. ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரூஃப் ரெயில்ஸ் போன்ற அம்சங்கள் ஸ்டைலிஷ் லுக்கை வழங்குகின்றன. 4 மீட்டருக்குள் இருந்தாலும், உள்ளக இடவசதி மிகவும் விசாலமாக உள்ளது. நகர போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மிகவும் ஏற்றதாக உள்ளது.
இந்த காரின் மிகப்பெரிய பலம் அதன் நெகிழ்வான இருக்கை அமைப்பே. மூன்றாவது வரிசை இருக்கைகளை தேவையில்லையெனில் முழுவதும் அகற்றலாம். இதனால் அதிகப் பயணிகள் இல்லாதபோது பெரிய பூட் ஸ்பேஸ் கிடைக்கும். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப காரை மாற்றிக் கொள்ளும் வசதி குடும்பங்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
55
ரெனால்ட் டிரைபர் விலை
1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த கார் நகர ஓட்டத்திற்கு சீரான அனுபவத்தை தருகிறது. 18-20 கி.மீ வரை மைலேஜ் கிடைப்பது தற்போதைய பெட்ரோல் விலையில் பெரிய நன்மை. பாதுகாப்பிலும் குறைவில்லை. குளோபல் NCAP-ல் 4 ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளது. ஆரம்ப விலை ரூ.5.76 லட்சம் மட்டுமே, குறைந்த செலவில் நல்ல 7-சீட்டர் குடும்பக் காரைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு ஆகும்.