Bikes: ஸ்டைல், மைலேஜ் இரண்டிலும் கலக்கும் டாப் 5 சூப்பர் 350cc பைக்குகள்!

Published : Apr 11, 2026, 12:46 PM IST

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 350cc பைக்குகளில், செயல்திறன் மற்றும் மைலேஜ் அடிப்படையில் சிறந்த 5 மாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹன்டர் 350 பைக்குகளின் மைலேஜ் குறித்து பார்க்கலாம்.

PREV
16
சிறந்த 5 350cc பைக்குகள்

இந்தியாவில் 350cc பைக்குகள் என்பது ஒரு உணர்ச்சிகரமான விஷயம். முன்பெல்லாம் 350cc என்றாலே ராயல் என்ஃபீல்டு மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது பல நிறுவனங்கள் இந்த பிரிவில் (Segment) களமிறங்கியுள்ளன. அதாவது ஹோண்டா, ஜாவா மற்றும் எஸ்டி, டிரையம்ப் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இதில் நல்ல பெர்ஃபாமன்ஸ், சூப்பர் மைலேஜ் இரண்டும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த லிஸ்ட் உதவும். இந்நிலையில் பெர்ஃபாமன்ஸுக்கும் மைலேஜுக்கும் சரியான 5 பைக்குகள் பற்றி பார்ப்போம்.

26
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

இந்த பைக் பெர்ஃபாமன்ஸுக்கும் மைலேஜுக்கும் நல்ல பேலன்ஸ் கொடுக்கிறது. ஒரு லிட்டருக்கு சுமார் 40 கி.மீ. மைலேஜ் தருகிறது. இதில் இருக்கின்ற 349cc இன்ஜின், மற்ற பைக்குகளை விட ஸ்மூத் மற்றும் சொகுசான பயண அனுபவத்தைக் கொடுக்கிறது. இது பெர்ஃபாமன்ஸுக்காக மட்டுமல்லாமல், கிளாசிக் லுக், காலத்தால் அழியாத டிசைனுக்காகவும் மக்கள் இதை அதிகமாக விரும்புகின்றனர்.

36
ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 36.2 கி.மீ. மைலேஜ் தருகிறது. ஆனால், இதோடு உண்மையான பலம் என்னவென்றால் சிட்டிக்குள் இருந்து ஓட்டுவதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. எடை குறைவு மற்றும் காம்பேக்ட் டிசைன்னில் இருக்கிறது. டிராஃபிக்கில் கூட ஈஸியாக இயக்கலாம். மைலேஜ் சில பைக்குகளை விட குறைவாக கொடுத்தாலும் இதன் ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் தனித்துவமானது.

46
ஹோண்டா ஹைனெஸ் CB350

ஹோண்டா ஹைனெஸ் பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 46 கி.மீ. மைலேஜ் தருகிறது. இதனால் இந்த செக்மென்ட்லயே இது ஒரு சிக்கனமான பைக்காக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்ஜின் மற்றும் ஸ்மூத்தான பவர் டெலிவரியும்தான் இந்த பைக்கின் பெரிய ப்ளஸ். சிட்டி டிராஃபிக், லாங் ஹைவே ரைடு இரண்டுக்குமே நம்பிக்கையோடு ஓட்டலாம்.

56
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

ராயல் என்ஃபீல்டு பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 36.2 கி.மீ. மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது. இதனால் டெய்லி யூஸுக்கும் இது நல்ல சாய்ஸ். இதில் அதே நம்பகமான இன்ஜின் பிளாட்ஃபார்ம்தான் இருக்கிறது. ஆனால், இதோடு உண்மையான அடையாளம், சிம்பிளான டிசைனும், நீடித்து உழைக்கின்ற தன்மையும்தான்.

66
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 36.2 கி.மீ. மைலேஜ் தருகிறது. இது டூரிங் போவதற்கு ரொம்ப வசதியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சொகுசு ரைடிங் பொசிஷனும், கிளாசிக் க்ரூஸர் ஸ்டைலும் இதை தனித்துவமானது. இதில் வேகத்தை விட, சொகுசுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் லாங் டிரைவிங் கூட பைக் ரொம்ப ஸ்டேபிளா, நம்பகத்தன்மையா இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories