
Best Electric Cars in India : பெட்ரோல்-டீசல் கார்களுக்குப் பதிலாக ஒரு புதிய மின்சார வாகனம் வாங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்ற 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சில சிறந்த வாகனங்களைப் பற்றிய தகவல்களை இங்கே அறியலாம். இவை முழு சார்ஜில் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும். தினசரி பயன்பாட்டுடன் கூடுதலாக நீண்ட தூரப் பயணங்களுக்கும் இவை ஏற்றவை. வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.
எம்ஜி விண்ட்சர்:
உங்களுக்கு சொகுசு மின்சார கார் வாங்க ஆர்வம் இருந்தால், விண்ட்சர் ஈவி உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். முழு சார்ஜில் 331 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய 38kWh LFP பேட்டரியை இது கொண்டுள்ளது. இந்த கார் 136 ஹெச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. எம்ஜி விண்ட்சருக்கு 135 டிகிரி சாய்வு இருக்கைகள் உள்ளன (ஏரோ-லாஞ்ச் இருக்கைகள்). ஒரு சினிமா ஹாலிலோ அல்லது விமானத்திலோ வணிக வகுப்பில் அமர்ந்திருப்பது போன்ற சுகத்தை இந்த காரின் இருக்கைகள் உங்களுக்கு வழங்குகின்றன. 15.6 அங்குல டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளது.
பாதுகாப்பிற்காக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங், டிஸ்க் பிரேக்குகள் போன்றவை பொருத்தப்படும். இந்த கார் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன், பேட்டரி வெறும் 30 நிமிடங்களில் 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும். விண்ட்சர் ஈவியின் எக்ஸ்ஷோரூம் விலை 13.50 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. ஆனால் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) திட்டத்தின் கீழ், வெறும் 10 லட்சம் ரூபாய் தொடக்க எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த காரை வாங்கலாம்.
எம்ஜி இசட்எஸ்:
எம்ஜி இசட்எஸ் ஈவி ஒரு நீண்ட தூர மின்சார எஸ்யுவி. பல நல்ல அம்சங்கள் இதில் கிடைக்கின்றன. இதில் இடத்திற்கு ஒரு குறைவுமில்லை. அதன் வடிவமைப்பு மிகவும் பிரீமியம். 18.98 லட்சம் ரூபாய் முதல் இந்த காரின் விலை. முழு சார்ஜில் 461 கிலோமீட்டர் வரை பயணிக்க இது உறுதியளிக்கிறது. பாதுகாப்பிற்காக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங், டிஸ்க் பிரேக்குகள் போன்றவையும் இந்த காரில் உள்ளன.
டாடா பஞ்ச்:
டாடா மோட்டார்ஸின் மிகவும் விலை குறைந்த மின்சார எஸ்யுவி பஞ்ச் ஈவியின் விலை 9.99 லட்சம் முதல் 14.29 லட்சம் ரூபாய் வரை. முழு சார்ஜில் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய டாடா பஞ்ச் ஈவி நகர பயணத்திற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். பல சிறந்த அம்சங்கள் இந்த வாகனத்தில் கிடைக்கின்றன. பாதுகாப்பிற்காக, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கிங் சிஸ்டம், EBD உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
டாடா நெக்ஸான்:
டாடா நெக்ஸான் ஈவி பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 12.49 லட்சம் ரூபாய் நெக்ஸான் ஈவியின் எக்ஸ் ஷோரூம் விலை. தினசரி பயன்பாட்டிற்கு இந்த காரைப் பயன்படுத்தலாம். முழு சார்ஜில் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க இது உறுதியளிக்கிறது.
எம்ஜி காமெட்:
எம்ஜி காமெட் மிகவும் விலை குறைந்த மின்சார கார். 17.3kWh லித்தியம் அயன் பேட்டரியை கார் கொண்டுள்ளது. முழு சார்ஜில் 230 கிலோமீட்டர் வரை பயணிக்க இந்த கார் உறுதியளிக்கிறது. 6.99 லட்சம் ரூபாய் முதல் இதன் எக்ஸ் ஷோரூம் விலை. காரில் நல்ல இடம் இருந்தாலும், பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும். காமெட் அதன் வடிவமைப்பால் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும். தினசரி பயன்பாட்டிற்கு இது ஒரு சிறந்த எஸ்யுவி ஆக இருக்கும்.