No-License Electric Scooters for Women : பெண்கள் ஈஸியாக ஓட்டும் வகையிலான ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லாத டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் செலவுகளை சமாளிக்க கணவன் மட்டுமின்றி மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஸ்கூட்டர்கள் மிகவும் கை கொடுத்து உதவுகின்றன. ஆனால் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களால் பலரும் ஸ்கூட்டர்கள் வாங்க தயங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலேயே ஓட்டும் ஸ்கூட்டர்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
பெண்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்
குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் டிரைவிங் லைசன்ஸ் தேவை இல்லாத டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி 250 வாட்ஸ் குறைவான மின் திறன் கொண்ட ஸ்கூட்டர் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய எலக்ட்ரிக் சூட்டர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் இல்லை. இவற்றை ஓட்ட வயது வரம்பும் கிடையாது என சொல்லப்படுகிறது.
26
ஓலா கிக் (Ola Gig)
அந்த வகையில் முதலாவது ஓலா கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சொல்லலாம். நிறுவனத்தின் தரமான பெயருக்கான இந்த ஸ்கூட்டர் குறைந்த தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 112 கிலோமீட்டர் வரை எந்த தடையும் இல்லாமல் பயணிக்கலாம். மற்ற ஸ்கூட்டர்களுக்கு இணையாக இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் குறைந்த எடை பெண்கள் சுலபமாக ஓட்ட உதவுகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.39,999-ல் இருந்து தொடங்குகிறது.
36
ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் (Hero Electric Flash LX)
இந்தியாவில் நம்பகமான உறுதியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட் மோட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொட்டி கிடைக்கின்றன. இந்த வண்டியின் பராமரிப்பு செலவு மிக குறைவு. பெண்களுக்கு கையாள மிக எளிதான ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை ரூ.64,000 ஆகும்.
ஒகினாவா R30ஸ்கூட்டர் ஸ்டைலான தோற்றம் மற்றும் உறுதியான கட்டுமானத்துக்கு பெயர் பெற்றது. இதில் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சமே இதன் தரமான பிரேக்கிங் சிஸ்டம் தான். பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் ஸ்கூட்டரில் ஒன்றாக இது உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.61,998 ல் இருந்து தொடங்குகிறது.
56
யூலு வின் (Yulu Wynn)
இது ஒரு காம்பாக்ட் ஸ்கூட்டர் ஆகும். கூட்ட நெரிசலில் எந்தவித சிரமமும் இன்றி செல்ல இந்த ஸ்கூட்டர் உதவுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பேட்டரியை கழட்டி வீட்டிலேயே நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஓட்டுவதற்கு சைக்கிள் போக மிக எளிதாக உள்ளதால் பெண்கள் ஒட்டுவதற்கு மிகவும் பொருத்தமான ஸ்கூட்டராக இது இருக்கும். யூலு வின் மாடலின் விலை ரூ.60,000 ஆகும்.
66
கெய்னடிக் கிரீன் ஜிங் (Kinetic Green Zing)
கெய்னடிக் நிறுவனத்தின் நவீன மின்சார ஸ்கூட்டராக உள்ள இந்த மாடலில் ரிமோட் லாக் மற்றும் ஆன்டி-தெஃப்ட் அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. அதிக லக்கேஜ் வைக்கும் வசதி கொண்டுள்ளதால் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லவும் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை ரூ.79,999 ஆகும்.
பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர்கள் ஏன் ஏற்றது?
மேற்கண்ட இந்த ஸ்கூட்டர்களில் பெட்ரோல் தேவையில்லை. ஆகவே ஆயில் மசாஜ், சர்வீஸ் செய்வது போன்ற வேலைகள் இல்லை என்பதால் பெண்களுக்கு தொந்தரவு இல்லை. இதன் வேகமும் குறைவாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளது. மிக முக்கியமாக பெட்ரோல் செலவு இல்லவே இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்ய வெறும் இரண்டு முதல் மூன்று யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும் என்பதால் இந்த ஸ்கூட்டர்கள் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.