90களின் பிரபலமான வாகனமான டாடா சுமோ, இன்றைய இளைய தலைமுறைக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாகிவிட்டது. 10 பேர் அமரும் வசதியுடன் 1994 இல் அறிமுகமான இந்த வாகனம், வெறும் 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்தது. 2002 இல் சுமோ+ என்ற புதிய பதிப்பு வெளியானது. தற்போது டாடா சுமோவின் புதிய மாடல் அறிமுகமாகவுள்ளது.
டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் புதிய வாகனத்தின் அம்சங்கள் இணையத்தில் வைரலாகின்றன. ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக புதிய தோற்றம், அம்சங்களுடன் டாடா சுமோ வருகிறது. 9 லட்ச ரூபாயில் அறிமுகமாகலாம்.
2025ல் புதிய சுமோ அறிமுகமாகலாம். 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் வகைகள். 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும்.
உட்புற வடிவமைப்பில் கவனம். விசாலமான கேபின், வசதியான இருக்கைகள், பிரீமியம் தோற்ற டேஷ்போர்டு, 9 அங்குல திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆதரவு.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். பாதுகாப்பு அம்சங்கள்: இரட்டை ஏர்பேக்குகள், EBD உடன் ABS, உறுதியான பாடி, பார்க்கிங் சென்சார்கள்.
விலை: சுமோ LXI - 9.5 லட்சம், VXI - 10.5 லட்சம், ZXI - 11.5 லட்சம், ZXI+ - 12.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).