டாடா மோட்டார்ஸ், வரவிருக்கும் சியரா எஸ்யூவியின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது, இது காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எளிமையான கேபினைக் காட்டுகிறது. மேலும், புதிய வண்ணங்கள் மற்றும் நவம்பர் மாத அறிமுகம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
டாடா மோட்டார்ஸ், வரவிருக்கும் சியரா எஸ்யூவியின் புதிய டீசர் என்று வெளியிட்டு ஆட்டோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது காரின் குறைந்த விலை அல்லது ஆரம்ப வேரியண்டின் டீசர் என கூறப்படுகிறது. முழு வசதிகள் கொண்ட டாப்-ஸ்பெக் மாடலுக்கு மாறாக, இந்த டீசரில் எளிமையான கேபின் அமைப்பு காட்டப்பட்டுள்ளது. எனினும், ஆரம்ப மற்றும் நடுத்தர வேரியண்ட்டுகளிலும் டூயல் ஸ்கிரீன் அமைப்பு இருக்கும் என்பது இந்த டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிர் நிற டாஷ்போர்டு, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் அகலமான ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் ஆகியவை தெளிவாக உள்ளன காணப்படுகின்றன. புதிய சென்டர் கன்சோல் பிசிக்கல் பட்டன்களுடன் வருகிறது, இது பயன்படுத்த எளிதான அமைப்பாக உள்ளது.
24
புதிய சியரா 2025
கார் இன்டீரியரின் மொத்த வடிவமைப்பு உயர்ந்த வேரியண்ட்டுகளுடன் ஒத்த உணர்வை அளிக்கிறது. மினிமலிஸ்ட் ஸ்டீயரிங் வீல், டச் அடிப்படையிலான கட்டுப்பாடுகள், லேயர்டு டாஷ் என்ற அனைத்துமே ஒரு பிரீமியம் SUV போன்ற அனுபவத்தை தருகின்றன. வெளிப்புறத்திலிருந்து இன்டீரியர் வரை, சியாராவின் வேரியண்ட்களில் அம்ச வேறுபாடுகள் இருக்கும் என்பதை டாடா உறுதிப்படுத்துகிறது. மேலும், டாடா சியாராவுக்கு அண்டமான் அட்வென்சர், பெங்கால் ரூஜ், மூனார் மிஸ்ட், மினரல் கிரே, குர்க் கிளவுட்ஸ், பிரிஸ்டைன் வைட் ஆகிய ஆறு வண்ணங்களையும் வெளியிட்டுள்ளது.
34
சியரா இன்டீரியர் அம்சங்கள்
சியராவின் முக்கிய ஈர்ப்பு அம்சமாக மூன்று இணைக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் குறிப்பிடப்படுகின்றன. இது டாடா வாகனங்களில் முதல் முறையாக வரும் தொழில்நுட்பம். டிரைவருக்கான டிஜிட்டல் கிளஸ்டர், மையத்தில் இன்ஃபோடெயின்மென்ட், பயணிப்பவருக்கான மூன்றாவது டிஸ்ப்ளே ஆகியவை ஒரே கிளாஸ் யூனிட்டில் இணைக்கப்பட்டுள்ளன. ஹைவாக் கட்டுப்பாடுகள், அழகான கியர் லிவர் பகுதி, சாஃப்ட்-டச் மெட்டீரியல், மெட்டல் டச் போன்றவை உள்ளமைப்பை மேலும் உயர்த்துகின்றன. இந்த மாடல் நவம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
புதிய சியாரா, பழைய மாடலின் நினைவுகளை மீட்டெடுக்கும் பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பெரிய கண்ணாடி பகுதிகளை தக்கவைத்துள்ளது. வளைந்த ஜன்னல் தனித்துவமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சக்தி பிரிவில், 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் அல்லது ஹாரியரின் 2.0 லிட்டர் இன்ஜின் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரிக் சியராவுக்கு இரண்டு பேட்டரி பேக்குகள் வழங்கப்படலாம். சமீபத்தில் டாடா அறிமுகப்படுத்திய குவாட்-வீல் டிரைவ், சியாராவிலும் கிடைக்கக்கூடும். மேலும், ADAS பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நான்கு-ஸ்போக் ஸ்டீயரிங் போன்றவை சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.