ரூ.5.59 லட்சம் விலை.. டாடா காரை போட்டிபோட்டு கொண்டு வாங்கும் இந்தியர்கள்.. என்ன ஸ்பெஷல்?

Published : Feb 11, 2026, 08:37 AM IST

டாடா மோட்டார்ஸின் மைக்ரோ எஸ்யூவி 7 லட்சம் யூனிட் விற்பனை என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. 5-ஸ்டார் பாதுகாப்பு, ரூ.5.59 லட்சத்தில் தொடங்கும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

PREV
15
ரூ.5.59 லட்சம் விலையில் கிடைக்கும் டாடா பஞ்ச்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்யூவி என்றாலும், டாடா பஞ்ச் இந்திய கார் சந்தையில் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த மைக்ரோசாஃப்ட் எஸ்யூவி, ஐந்து ஆண்டுக்குள் 7 லட்சம் விற்பனையானது என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. நகர பயன்பாடு, குடும்பத் தேவைகள், மற்றும் பாதுகாப்பு என மூன்றையும் சமநிலையில் கொண்டு வந்ததே இந்த காரின் வெற்றியின் அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது.

25
டாடா பஞ்ச் சாதனை

2021 அக்டோபரில் தொடங்கிய பஞ்ச் விற்பனை, 2026 ஜனவரியில் 6,97,433 யூனிட்டுகளை கடந்தது. பிப்ரவரி 2026 தொடக்க நாட்களில் கூடுதல் 2,567 கார்கள் விற்பனையாகி, அதிகாரப்பூர்வமாக 7 லட்சம் இலக்கை எட்டியது. டாடா நெக்சானுக்குப் பிறகு, இந்த சாதனையை அடைந்த இரண்டாவது எஸ்யூவி என்ற பெருமையையும் பஞ்ச் பெற்றுள்ளது.

35
டாடா பஞ்ச் விற்பனை விவரங்கள்

2026 ஜனவரி மாதம் பஞ்ச் காருக்கு வரலாற்றிலேயே சிறந்த மாதமாக அமைந்தது. அந்த மாதத்தில் மட்டும் 19,257 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 19% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதேபோல், பஞ்ச் மற்றும் நெக்ஸான் இணைந்து, டாடா மோட்டார்ஸின் மாதாந்திர பயணியர் வாகன விற்பனையை 70,222 யூனிட்களாக உயர்த்தியது.

45
டாடா பஞ்ச் விலை

விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக, ஜனவரி 13-ஆம் தேதி அறிமுகமான புதிய பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பார்க்கப்படுகிறது. ரூ.5.59 லட்சம் ஆரம்ப விலையில் இந்த மாடலில், பஞ்ச் EV-யை போன்ற இன்டீரியர், வெளிப்புற வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் முதன்முறையாக டர்போ பெட்ரோல் எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 வகைகளில், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.

55
டாடா பஞ்ச் பாதுகாப்பு

பஞ்ச் வெற்றியின் மற்றொரு முக்கிய தூண் பாதுகாப்பு ஆகும். அறிமுகத்துக்கு முன்பே 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான சீட்டிங் பொசிஷன், எளிதான ஏற்றம்-இறக்கம் போன்ற எஸ்யூவி தன்மைகள், குறைந்த விலை மற்றும் பாதுகாப்பு இணைந்து, பஞ்சை சாதாரண கார் அல்ல. ஒரு நம்பகமான குடும்ப எஸ்யூவி ஆக மாற்றியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories